டீம்ல எங்க ரெண்டு பேருக்கு பெரிய பிரஷர் இருந்தது.. கேப்டன் சூரியகுமார் காப்பாத்தி விட்டு இருக்காரு – திலக் வர்மா பேட்டி

0
106
Tilak

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் திலக் வர்மா கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

காயத்திலிருந்து திரும்பி வந்த திலக் வர்மாவுக்கு தென் ஆப்பிரிக்க தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. அவருடைய இடத்தை ரியான் பராக் பிடித்திருந்தார். எனவே அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அழுத்தத்தில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்

நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து 52 பந்தில் இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். திலக் வர்மாவை போலவே அபிஷேக் ஷர்மாவும் இந்த தொடரில் தனி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தன்னை தள்ளிக் கொண்டு இருந்தார். அவருக்கு தொடர்ந்து பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் மோசமாக சென்றது.

இந்த நிலையில் நேற்று அபிஷேக் ஷர்மா 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கத்தில் திலக் வர்மா 56 பந்தில் 8 பவுண்டரி 7 சிக்ஸர் அடித்து, இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 107 ரன்கள் குவித்தார். மேலும் அவருக்கு இது முதல் சர்வதேச சதம் ஆகும். காயத்திலிருந்து திரும்பி வந்த அவருக்கு முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்புவதற்கு முன்பாக முக்கிய சதமாக அமைந்தது.

- Advertisement -

சூரியகுமார் யாதவுக்கு நன்றி

இது குறித்து திலக் வர்மா கூறும் பொழுது “காயத்தில் இருந்து மீண்டு வந்து சாதித்திருப்பது மகிழ்வான உணர்வாக இருக்கிறது. ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது பந்து இரட்டை வேகத்தில் வந்தது. அபிஷேக் ஷர்மாவுக்கும் எனக்கும் ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி தனிப்பட்ட முறையில் இருந்தது. மேலும் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த பொழுது புதியவர் ஒருவர் உள்ளே வந்து விளையாடுவது அவ்வளவு எளிதாக இல்லை”

இதையும் படிங்க : திலக் வர்மா நம்பர் 3ல் விளையாட காரணமே.. அவர் சொன்ன அந்த வார்த்தைதான்.. அதான் வாய்ப்பு கொடுத்தேன் – இந்திய கேப்டன் பேட்டி

“இந்திய அணிக்காக விளையாடி சதம் அடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதற்காக என்னுடைய கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு நான் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்தான் நான் மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். இது என் கனவு நனவான தருணமாக இருக்கிறது. வெற்றி போராடி பெறப்பட்டு இருந்தாலும் எங்களுக்கு மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -