நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு பிறகு பேசிய அர்ஸ்தீப் சிங் இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர் மோர்கள் குறித்து மிகவும் சுவாரசியமான கருத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டு தந்து இரண்டு முக்கிய விக்கெட் கைப்பற்றிய அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். பவர் பிளேவில் புதிய பந்தில் ஸ்விங் செய்து அபாரமான முறையில் அவர் பந்து வீசியது இந்திய அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பஞ்சாப் நியூ சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி அர்ஸ்தீப் சிங்குக்கு மிகவும் மோசமான போட்டியாக அமைந்தது. அது இவருக்கு தனிப்பட்ட முறையில் சொந்த மைதானமாகவும் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து ஆறு வைடுகள் மற்றும் கூடுதலாக இன்னொரு வைடு மூலம் மொத்தமாக ஏழு வைடு பந்துகள் வீசினார். இதனால் ஒரு ஓவரில் அதிகம் வைடு வீசிய இந்திய பவுலர் என்கின்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரரானார். இந்த ஓவரை அவர் வீசிக் கொண்டிருந்த பொழுது இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முகம் அதிக முறை தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
இதுகுறித்து பேசிய அர்ஸ்தீப் சிங் கூறும்பொழுது ” கடந்த போட்டிக்கு பின்பாக என்னிடம் பேசிய மோர்கல் நான் அவருக்கு அதிகம் ஸ்கிரீன் டைம் கொடுத்து விட்டதாக கூறினார். ஏனென்றால் நான் இரண்டாவது போட்டியில் வைடு வீசிய ஒவ்வொரு முறையும், கேமராக்கள் அத்தனையும் மோர்கல் பக்கமாகவே திரும்பியது”
இதையும் படிங்க : நீ பந்தே போட வேண்டாம்பா.. ஆஸி பிக்பேஷ் லீக்கில் ஷாகின் அப்ரிடிக்கு நடந்த சம்பவம்.. பாபரும் பரிதாபம்
“ஒருவேளை பந்துவீச்சு பயிற்சியாளர் சரியான திட்டங்களை கொடுக்கவில்லை, இல்லை பந்துவீச்சாளர்களுடன் நல்ல பயிற்சியை செய்யவில்லை என்ற தவறான எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம். உண்மையில் எங்கள் பயிற்சியாளர் விளையாடுவதாக இருந்தால் எங்கள் பிளேயிங் லெவனில் எனக்கு இடம் கிடைக்காது” என்று கூறி இருக்கிறார்.