பஞ்சாப்ல இருந்தே எங்கள நிறைய பேர் சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. ப்ளீஸ் இந்த முறை பண்ணுங்க – அர்ஷ்தீப் சிங் பேச்சு

0
109
Arshdeep

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் முதல் தகுதி சுற்றுப்போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் தங்கள் அணியை பஞ்சாபில் உள்ள ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அர்ஷ்தீப் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா உடன் 19 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதே அளவு வெற்றிகள் மற்றும் புள்ளிகள் எடுத்து ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

- Advertisement -

பஞ்சாப் அணியின் மோசமான வரலாறு

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளான ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளை விட மிக மோசமான அணியாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் இருந்து வந்திருக்கிறது. ஆர்சிபி அணி கோப்பையை இல்லாவிட்டாலும் கூட சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக இருக்கிறது.

அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த 17 வருடம் முழுமையாக நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் தொடரில் இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மோசமான செயல்பாடு கொண்ட அணியாக இருக்கிறது. இப்படியான நிலையில்தான் மூன்றாவது முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் தங்கள் அணியை சொந்த மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்.

- Advertisement -

சொந்த மாநில அணியை ஆதரியுங்கள்

பஞ்சாப் வேகபந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஸ்னாப்சாட்டில் வெளிமாநில ரசிகை ஒருவரிடம் பேசும் பொழுது, அவர் தங்களுடைய மாநிலமாக இல்லாவிட்டாலும் ஆதரித்ததற்கு நன்றி எனவும், தங்கள் மாநிலத்தில் பல அணிகளை ஆதரிக்கும் ரசிகர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த நேரத்தில் தங்கள் அணியை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : இப்ப வரைக்கும் தோனி கிட்ட பேச எனக்கு தயக்கம் இருக்கு.. போன் உடைஞ்சதால தப்பிச்சு வந்தேன் – ஜடேஜா பேட்டி

இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் பேசும் பொழுது ” நீங்கள் பஞ்சாபி கிடையாது. நீங்கள் வெளியில் இருந்து எங்களை ஆதரித்து இருக்கிறீர்கள். உங்களுடைய ஆதரவுக்கு என்னுடைய நன்றிகள். இங்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல அணிகளை ஆதரிக்கக்கூடிய நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இது அவர்களுடைய பஞ்சாப் மாநிலம். எனவே அவர்கள் இந்த முறை அவர்களுடைய மாநில அணியை ஆதரிக்க வேண்டும். மைதானத்திற்கு பெரிய அளவில் சிவப்பு உடையில் வந்து எங்களுக்கு ஆதரவை கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -