போன மேட்ச் எனக்கு மோசமான நாள்.. இந்த மேட்ச்ல நான் சரியா செஞ்ச விஷயம் இதுதான் – அர்ஷ்தீப் சிங் பேச்சு

0
5
Arshdeep

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது வென்றார். பிறகு இந்த போட்டி குறித்து பேசியிருக்கிறார்.

கடந்த இரண்டாவது டி20 போட்டியில் ஒரே ஓவரில் 7 வைடுகள் வீசி, ஒரு ஓவரில் அதிக வைடுகள் வீசிய இந்திய பவுலராக மோசமான சாதனை படைத்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 13 ரன் மட்டுமே விட்டுத் தந்து 2 முக்கியமா விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த போட்டி நடைபெற்ற முல்லன்பூர் இவருக்கு சொந்த மைதானம் ஆகும். இன்றைய போட்டி நடந்த தரம்சாலா ஐபிஎல் தொடரில் சொந்த மைதானம் ஆகும்.

- Advertisement -

ஹோம் கிரவுண்ட் இல்லை

இந்த போட்டி குறித்து பேசி உள்ள அர்ஸ்தீப் சிங் கூறும் பொழுது ” நான் மைதானத்துக்குள் சென்ற பொழுது எல்லோரும் இது என்னுடைய ஹோம் கிரவுண்ட் என சொன்னார்கள். நான் உடனே இது என்னுடைய ஹோம் கிரவுண்ட் கிடையாது என்று சொன்னேன். அதற்குப் பிறகுதான் எனக்கு மனம் கொஞ்சம் லேசானது. அதற்குப் பிறகு அடிப்படைகளை பின்பற்றி, என் திறமையை நம்பி சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்”

“இந்த மட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் பொழுது சில நாட்கள் நாம் நினைத்தபடி செல்லாது. இப்படித்தான் எனக்கு கடந்த போட்டியில் மோசமான நாளாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

- Advertisement -

இன்று இதைத்தான் செய்தேன்

“இன்றைய போட்டியில் பந்துவீச்சில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்தேன் என்றால், நான் எதுவுமே செய்யவில்லை என்பது தான் முக்கியமானது. நான் பந்தை சரியான இடங்களில் வீசி, ஆடுகளத்தில் இயல்பாக கிடைத்த உதவியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதையே நான் இன்றைய ஆட்டத்தில் செய்தேன்”

இதையும் படிங்க : எங்க சென்னையில இப்படி நடக்காது.. அந்த ஒரு மீட்டிங் நடத்துனதுதான் வெற்றிக்கு காரணம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

“இன்று ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு கொஞ்சம் உதவி இருந்தது. மேலும் இங்கு குளிரான சூழ்நிலை காணப்பட்டது. இதன் காரணமாக வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் மற்றும் சீம் கிடைத்தது. நான் என்னுடைய திட்டத்தை மிகவும் சிம்பிள் ஆக வைத்தேன். சரியான இடத்தில் பந்து வீசுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டேன். அதற்கு சரியான பலன் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -