இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடிய அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்று சில முக்கிய கருத்துகளையும் கூறியிருக்கிறார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடி வரும் நிலையில் இதில் டெஸ்ட் தொடரில் ஏற்கனவே வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் இன்று விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை குவித்தது.
இதில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் அர்ஸ்தீப் சிங் 3.5 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்குப் பிறகு களம் இறங்கி விளையாடிய இந்திய அணி 11.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் பந்து வீசிய பக்கத்தில் இருந்து சிறிது காற்று வீசியதால் அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் அதில் விரும்பிய விக்கெட்டுகள் பெறவில்லைதான். ஆனாலும் பரவாயில்லை. பந்து வீசும் போது மணிக்கட்டு பகுதியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. நான் எந்த வகையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறேன்.
இந்த அனுபவம் நன்றாக உள்ளது நீங்கள் எவ்வளவு போட்டிகளில் விளையாடுகிறீர்களோ அவ்வளவு சிறந்த அனுபவம் பெற முடியும். அனைவரும் பந்து வீசிய விதம் நன்றாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர் மயங்க் அகர்வால் பந்துவீச்சு அருமையாக இருந்தது. நான் நார்மலாக வீசும் பந்துகள் கூட அவரது பந்துவீச்சை ஒப்பிடும்போது மெதுவான பந்துகளாகவே இருந்தன. இந்த வடிவத்தில் செய்யக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் ஆடுகளம் மற்றும் அதன் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு மாற வேண்டியது அவசியம்” ஆகும். என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:8 பேர் இருக்காங்க.. கேப்டனா எனக்கு நல்ல தலைவலி.. ஜெயிச்சாலும் இதை செய்ய போறோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் வருகிற ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. எனவே அடுத்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.