டெத் ஓவரில் சரியில்லைன்னு சொன்னவங்க வாயடைத்து, மும்பை அணியை முடித்துக்கட்டிய அர்ஷ்தீப் சிங்; பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி!

0
374

கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பகல்கனவு கண்ட மும்பை இந்தியன்ஸ் அணியை, ஒரே ஓவரில் மொத்தமாக முடித்துக்கட்டி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தது மும்பை அணி. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் 26 ரன்கள், அதர்வா 29 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

ஷாம் கரன் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 55 ரன்கள், ஹர்பிரித் சிங் 28 பந்துகளில் 41 ரன்கள் அடிக்க, கடைசியில் வந்து கேமியோ விளையாடிய ஜித்தேஷ் சர்மா 7 பந்துகளில் 25 ரன்கள் விலாசினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி.

215 ரன்கள் இன்னும் இமாலய இலக்கை சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆனார். ரோகித் சர்மா மற்றும் கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியின் ஸ்கொரை வெகுவாக உயர்த்தினர்.

ரோகித் சர்மா 44 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 67 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். மீண்டும் பார்மிற்கு வந்த சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார். அதுவும் நீடிக்கவில்லை.

- Advertisement -

களத்தில் டீம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் இருந்தனர். கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. அடிக்க முடியும் என்று பலரும் நினைத்தபோது, அர்ஷ்திப் சிங் அபாரமாக பந்துவீசி இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் அடிக்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.