சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதற்கு பந்துவீச்சில் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் அவர் தனக்கு பும்ரா எந்த மாதிரியான அறிவுரைகளை தொடர்ந்து வழங்குகிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
அர்ஸ்தீப் சிங் இதுவரையில் 52 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் முறையில் 16 முதல் தர போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தன்னுடைய கனவாகக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தனக்கு என்ன மாதிரியான அறிவுரைகளை தினமும் தொடர்ந்து கொடுத்து வருகிறார், மேலும் வாசிம் அக்கரம் தன்னுடைய பந்துவீச்சு குறித்து என்ன பாராட்டினார் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அர்ஸ்தீப் சிங் பேசும்பொழுது “நீங்கள் ஒவ்வொரு முறை பும்ரா பாயுடன் பேசும் பொழுதெல்லாம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு ரசித்து பந்து வீசுகிறார் என்பது குறித்து உங்களுக்கு சொல்லுவார். எப்பொழுதும் காலை உணவு மேஜையில் நான் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எனக்கு வலியுறுத்துவார். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பொழுது தான் மக்கள் உங்களை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசுவது குறித்து தன்னுடைய யோசனைகளை என்னுடன் அவர் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார்.
நீங்கள் ஒரு ஸ்பெல்லில் ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகள் கூட எழுதலாம். ஒரு நாள் உங்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்காமல் போகலாம். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுடைய மனதையும் உடலையும் சோதிக்க கூடிய ஒரு நிகழ்வு. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பந்தை வீசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இதையும் படிங்க : சுதந்திரமா விடுங்க.. அடுத்த ரோகித் சர்மா இந்த பையன்தான்.. மொத்தத்தையும் மாத்துவான் – இர்பான் பதான் கருத்து
2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் என்னுடைய ரிலீஸ் பாயிண்ட் சிறப்பாக இருப்பதாகவும், நான் பந்தை இரு பக்கமும் ஸ்விங் செய்வது சிறப்பானது என்றும் வாசிம் அக்ரம் பாய் என்னை பாராட்டி இருந்தார். மேலும் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய திறமைக்கு விளையாட வேண்டும் என்று கூறியிருந்ததை” பார்த்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.






