சுதந்திரமா விடுங்க.. அடுத்த ரோகித் சர்மா இந்த பையன்தான்.. மொத்தத்தையும் மாத்துவான் – இர்பான் பதான் கருத்து

0
42
Irfan

இந்தியா அணி டி20 உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியதும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரர்களை சுதந்திரமாக விட்டு ஆதரிக்கும் பொழுது அவர் அடுத்த ரோகித் சர்மாவாக உருவெடுப்பார் என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு இந்த முறை டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்தார்கள். தற்போது இருவருமே ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அடுத்த சிறந்த துவக்க ஆட்டக்காரர்களை இந்திய டி20 அணிக்கு கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா தலைமையில் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் தோற்ற பிறகு, அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் அச்சமற்ற முறையில் விளையாட வேண்டும் என்று அணுகுமுறை மாற்றப்பட்டது. இதே முறையில் விளையாடி தான் டி20 உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும் பொழுது ” நீங்கள் ரிஷப் பண்ட்டை எடுத்துக் கொண்டால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவருடைய விக்கெட் கீப்பிங் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் மொத்தம் 14 டிஸ்மிஸல்கள் செய்து டி20 உலகக்கோப்பையில் உலகச் சாதனை செய்திருக்கிறார். இந்தத் தொடரில் அவருடைய பல கேட்ச்கள் மிகவும் சிறப்பானவை.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே அவருடைய விக்கெட் கீப்பிங் செயல் திறன் விமர்சிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் பிடித்த ஒரு இன்சைட் எட்ஜ் கேட்ச் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது அர்ஸ்தீப் சிங் நம்பிக்கையை அதிகரித்தது. அவர் தவற விட்டிருந்தால் அப்படியே எதிராக நடந்திருக்கும்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் முதல் விக்கெட்டை இழந்தால் அதிரடியாக விளையாடும் சுதந்திரம் கிடையாது. எங்களின் கடந்த காலத்தில் இந்த பழமை வாத அணுகுமுறை நிறைய தடுத்து நிறுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் வந்து இதை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: நான் ஓபனரா ஆட விரும்பறேன்.. ஆனா அந்த ரெண்டு பேர்தான் பெஸ்ட்.. அது எனக்கு கஷ்டம் – கில் பேட்டி

அவருடைய பேட்டிங் அணுகுமுறை ரோகித் சர்மாவின் அணுகுமுறையை போலவே இருக்கிறது. கடந்த காலங்களில் நாம் அவர்களை ஆதரித்தது போல இவரையும் ஆதரிக்க வேண்டும். அவர் இந்திய அணிக்கு ரோகித் சர்மா உடன் இணைந்து அச்சமற்ற கிரிக்கெட் விளையாடி ஒரு எக்ஸ் ஃபேக்டராக இருந்திருக்கிறார். அவர் ரசிகர்கள் விரும்பும் நவீன கிரிக்கெட்டை விளையாடுகிறார். ஆபத்தான ஷாட்கள்தான் அவருடைய பேட்டிங் பாணி” என்று கூறியிருக்கிறார்.