இந்திய கிரிக்கெட்

9 ஓவர் அசத்தல்.. ஐபிஎல் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்த அர்ஜுன் டெண்டுல்கர்.. மெகா ஏலத்தில் வாய்ப்பு

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் அணிகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய லெஜெண்ட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடுகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அவரது தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி அவரையும் ஏலத்தில் தொடர்ந்து எடுத்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்பது ஓவரில் அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல்

இந்த நிலையில் இன்று ரஞ்சி டிராபி ப்ளேட் பிரிவில் கோவா மற்றும் அருணாச்சல் பிரதேச அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல் பிரதேஷ் அணி முதலில் பந்து வீசுவது என்று அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல் பிரதேஷ் அணி அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சில் சிக்கி 30.3 ஓவரில் வெறும் 84 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டன்கள் செய்து 25 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக கோவா அணி நூறு ரன்கள் கூட எடுக்க முடியாமல் சுருண்டது. ஐபிஎல் மெகா ஏலம் மிக அருகில் இருக்கும் பொழுது அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த சிறப்பான பவுலிங் செயல்பாடு ஐபிஎல் அணிகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

சில நாட்களுக்கு முன்பாக கையில் குறைவாக 51 கோடி ரூபாய் மட்டுமே வைத்திருக்கும் சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க ஆர்வம் கொண்டிருப்பதாக சில செய்திகள் வெளியில் வந்தன. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கரை வாங்கி தங்களது அடையாளத்தை தொடர விருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : என்னை நம்புங்க.. ஆஸி தொடர்ல இந்த இந்திய வீரர்தான் எக்ஸ்-பேக்டர்.. அவரே ஓபன் பண்ணட்டும் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

இருந்த போதிலும் இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் கடந்த முறைகள் போல் இல்லாமல் அவரை வாங்க விரும்பும் அணிகள் ஏலம் கேட்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் அவர் ஆல் ரவுண்டர் என்கின்ற காரணத்தினால் சில ஐபிஎல் அணிகள் அவருக்காக போட்டி போடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!

- Advertisement -
Published by