என்னை நம்புங்க.. ஆஸி தொடர்ல இந்த இந்திய வீரர்தான் எக்ஸ்-பேக்டர்.. அவரே ஓபன் பண்ணட்டும் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

0
206
Raina

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வீரர் எக்ஸ்#பேக்டராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட வீரரையே துவக்க ஆட்டக்காரராகவும் களம் இறக்கலாம் என்றும், அவரின் திறமை கொடுத்து தான் அறிந்திருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியிடம் இருக்கும் கேள்விகள்

தற்போது இந்திய அணிக்கு முகமது ஷமி இல்லாதது பவுலிங் யூனிட்டில் பின்னடைவாக இருக்கிறது. அதிவேக பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அப்படி என்றால் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் யார்? என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது.

அடுத்து இந்திய பேட்டிங் யூனிட்டில் ரோகித் விளையாடாத சூழ்நிலையில் துவக்க ஆட்டக்காரராக யார் வருவார்கள்? மேலும் இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் எந்த வீரர் விளையாட வைக்கப்படுவார்? என்கின்ற இன்னொரு கேள்வி இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் இந்திய அணி நிர்வாகம் சரியான பதிலை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இவர்தான் எக்ஸ்-பேக்டராக இருப்பார்

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “ரோகித் சர்மா இடத்தில் கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரராக வரலாம். அதே சமயத்தில் துருவ் ஜுரலை கூட அவர்கள் துவக்க இடத்தில் களம் இறக்கலாம். இதற்கான முடிவை பயிற்சியாளர்தான் எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேடும் எக்ஸ்-பேக்டராக துருவ் ஜுரல் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். முதல் டெஸ்டில் நீங்கள் அவரையே துவக்க இடத்திற்கு முயற்சி செய்யலாம். பின்பு ரோகித் வந்ததும் அந்த இடத்தை விட்டு விடலாம். உண்மையில் சிறப்பாக செயல்படும் ஒரு இளைஞனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது?”

இதையும் படிங்க : ஸ்மித் பலவீனம் எனக்கு துல்லியமா தெரியும்.. ஐபிஎல்-ல தான் அதை இப்படி கண்டுபிடிச்சேன் – அஸ்வின் பேட்டி

“மெல்போனில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் நான்கு ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. அப்பொழுது உடனடியாக துருவ் ஜுரல் விளையாடுவதற்கு களத்திற்கு வந்தார். புதிய கூக்கபுரா பந்தை எதிர்த்து விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால் துருவ் ஜுரல் அதை மிகவும் சிறப்பாக சமாளித்து விளையாடி ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் டிபென்ஸ் டெக்னிக் நன்றாக இருக்கிறது. மேலும் அடித்து விளையாடும் பொழுதும் சில ஷாட் நன்றாக விளையாடினார். எனவே கேஎல்.ராகுல் ஃபார்மில் இல்லாததால் இவரையே துவக்க இடத்திற்கு முயற்சி செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -