அர்ஜுன் டெண்டுல்கரை புதிதாகச் சேர்த்து அதிரடி காட்டிய பிசிசிஐ!

0
21693
Arjun

இந்திய கிரிக்கெட்டுக்கு பெங்களூரில் அமைந்துள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமி என்சிஏ வீரர்களின் காயம் மற்றும் உடல் தகுதி ஆகியவைப் பற்றி மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனிப்பட்ட வீரர்களின் திறன் வளர்த்தல் அளவிலும் செயல்படுகிறது.

தற்பொழுது நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ்.லக்ஷ்மன் இருந்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராகுல் டிராவிட் அந்தப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விவிஎஸ். லக்ஷ்மன் யோசனையில் 20பேர் கொண்ட இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் பேசும் பொழுது ” இந்த ஆண்டின் பிற்பகுதியில் அண்டர் 23 ஆசியக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. மேலும் திறமையான இளம் வீரர்களை பிசிசிஐ எதிர்பார்க்கிறது. ஆல் ரவுண்டர்கள் முகாம் என்பது லக்ஷ்மன் அவர்களின் யோசனையாகும். இதில் எல்லா வடிவ கிரிக்கெட் விளையாடும் இளம் வீரர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ள எல்லோரும் சுத்தமான ஆல் ரவுண்டர்கள் கிடையாது. பேட்டிங் மற்றும் பவுலிங் ஆல்ரவுண்டர் என எதிரெதிராக இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த திறமை குறைவாக இருக்கிறதோ அதில் பட்டைத் தீட்டப்பட்டு திறன் உயர்த்தப்படுவார்கள்.

- Advertisement -

அர்ஜுன் டென்டுல்கரை ஆட்ட எண்ணிக்கை மற்றும் எடுத்த விக்கெட் என்ற வகையில் பார்த்து நாங்கள் சேர்க்க கிடையாது அவரிடம் பெரிதான எண்கள் கிடையாது. ஆனால் அவரிடம் குறிப்பிட்ட திறன் இருக்கிறது. அவர் தனது அறிமுகப் போட்டியில் சதம் அடித்தார். மேலும் வேகப்பந்துவீச்சில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுகிறார். இந்தக் காரணத்தால் அவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்!

இந்த முகாமில் சேத்தன் சக்கரியா, திவிஜ் மெக்ரா, அபிஷேக் ஷர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஜுன் டெண்டுல்கர் போன்ற இளம் ஆல் ரவுண்டர்கள் இன்னும் இந்த 20 நாள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாமில் வாய்ப்பைப் பெற்று கலந்து கொள்ள இருக்கிறார்கள்!