“சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால்தான்  அர்ஜுன் டெண்டுல்கருக்கு  வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா”   ரசிகர்கள் சராமாரி கேள்வி!

0
670

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வணக்கம் போல இரண்டு தோல்விகளுடன் தொடங்கி இருக்கிறது மும்பை அணி. முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் நேற்றைய இரண்டாவது போட்டியை சென்னை அணிக்கு எதிராக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது மும்பை.

பயிற்சியாளர் மற்றும் புதுமுக வீரர்கள் என பல மாற்றங்களுடன் இந்த ஐபிஎல் எதிர்கொண்டு இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த 13 ஆண்டுகளாக மும்பை அணிக்கு விளையாடி வந்த தைரோன் பொல்லார்டு அணில் இல்லாமல் மும்பை சந்திக்கும் முதல் ஐபிஎல் இதுவாகும். மேலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

புதிய பயிற்சியாளர் புதுமுக வீரர்கள் என ஆ பல சவால்களை சந்திக்க மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் போட்டியில் தயாராக உள்ளது. நேற்றைய போட்டிக்குப் பின்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கூட சீனியர் வீரர்கள் அதிக பொறுப்புகளை உணர்ந்து விளையாட முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. மேலும் அதனை தன்னிடமிருந்து துவக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் மற்றும் இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொடர்ச்சியாக மும்பை அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியில் இடம் பெற்றிருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை ஒரு முறை கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்பை அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கடந்த வருடம் மும்பை அணியிலிருந்து கோவா அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டென்டல்கர் அந்தப் போட்டியிகளுக்காக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கிடம் சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். அதன் பலனாக நடந்து முடிந்த ரஞ்சி சீசனில் ஒரு சதம் உட்பட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் அர்ஜுன் டெண்டுல்கர் . இதனால் இந்த வருடத்திற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இதுவரை கிடைக்கவில்லை .

- Advertisement -

மும்பை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் சரியான ஒரு ஆடும் லெவனை பெற்றிருக்கவில்லை. அறிமுகம் இல்லாத புதிய வீரர்களும் தடுமாறி வரும் நிலையில் அர்ஜுன் டென்டல் கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுத்து வருகின்றன. இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மனுமான ஆல் ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பயனாளர் ஒருவர் ” மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை அவர்கள் ஏன் இன்னும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மேலும் அவர் அவ்வளவு மோசமாக வலை பயிற்சிகளில் பந்து வீசுகிறார் என கேள்வி எழுப்பினார். கடந்த மூன்று ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு சில வாய்ப்புகள் கொடுத்தே ஆக வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார், மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்னொரு பதிவர் ” அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலேயே வெறுக்கப்படுகிறாரா”? என கேள்வி எழுப்பியுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இடம்பெறாதது குறித்து இதுபோன்று பல்வேறு விதமான விமர்சனங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது