இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி 2024-25க்காண போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள கோவா அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் கோவா அணியிலிருந்து சச்சின் டெண்டுல்கரின் மகன் ஆன அர்ஜுன் டெண்டுல்கர் நீக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் ஹசாரே ட்ராபி 2024 -25
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி ஒரு சில போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது விஜய் ஹசாரே டிராபி இந்திய உள்நாட்டு தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்திய உள்நாட்டு தொடரில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த நிலையில் தற்போது எஞ்சிய போட்டிகளில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கோவா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பும் தற்போது பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இருந்து நீக்கம்
முன்னதாக சையது முஸ்தாக் அலி டிராபி அணியில் இருந்து வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர் அதற்குப் பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் கோவா அணியில் இணைந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி கோவா அணி வெற்றி பெற தன்னால் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 35 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதையும் படிங்க:சுந்தரோட திறமைய பார்த்த ஆச்சரியமா இருக்கு.. 2 தடவ என்னோட இந்த கணிப்பை பொய் ஆக்கினாரு – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
இந்த நிலையில் மணிப்பூருக்கு எதிராக விளையாடிய மூன்றாவது போட்டியில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில் பேட்டிங்கில் 24 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கோவா அணி வெற்றி பெற காரணமாக அமைந்திருக்கும் நிலையில் தற்போது அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கோவா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் இருக்கும் நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் செயல்பாடு போதிய அளவில் இல்லாததால் அவர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்கள் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.