“உங்க ஆளுங்க சுயநலம் இல்லாம விளையாட மாட்டாங்களா?” – பதறிப் போன ரவி சாஸ்திரி சொன்ன பளிச் பதில்!

0
301
Ravi

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்கி இருக்கிறது. முதல் போட்டியில் கடந்த வருடம் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன!

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேன் வில்லியம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான குஜராத் அகமதாபாத் ஆடுகளத்தில் இங்கிலாந்து தனது வழக்கமான அதிரடி அணுகுமுறையில் 350 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். இங்கிலாந்துக்கு ஆரம்பமும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் நியூசிலாந்து அணிக்காக இன்று விளையாடிய மூன்றே மூன்று பிரதான பந்துவீச்சாளர்கள் போல்ட், ஹென்றி மற்றும் சான்ட்னர் மூவரும் மிகச் சிறப்பாக பந்து வீசி, 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை பறித்து, இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அசத்தினார்கள்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இன்று அவருடைய ஆட்டத்தில் நான்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் அடித்தார். அதில் ஒரு சிக்ஸரும் வந்தது. சரியான நேரத்தில் சரியான வீரர் ஃபார்முக்கு வந்தது இங்கிலாந்துக்கு நல்ல விஷயம்.

- Advertisement -

இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் இருந்த ரவி சாஸ்திரி “அணிக்குத் தேவையானதை செய்ய தைரியமாக விளையாடிய ரூட்டுக்கு முழு கிரெடிட் கொடுக்க வேண்டும். நீங்கள் பிடிவாதமாக இருக்கும் பேட்ஸ்மேன்களை பெறுவீர்கள். டிரெஸ்ஸிங் ரூமில் பல வீரர்கள் இப்படி செல்ல மாட்டார்கள். அவர்கள் அணிக்காக தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் இடத்தை இழக்க வேண்டும் என்று பயப்படுவார்கள்!” என்று கூறினார்!

ரவி சாஸ்திரி உடன் கமெண்டரியில் இருந்த இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆதர்டன் இந்திய வீரர்கள் இப்படித்தானா என்ற கேள்வியை கேட்க, அதற்கு பதில் சொன்ன ரவி சாஸ்திரி ” இல்லை இல்லை நான் அவர்களை ஏதாவது புதிதாக முயற்சி செய்வதற்குதான் தள்ள வேண்டி இருந்தது. அவர்கள் ஆண்டுதோறும் இயல்பாக நிறைய ரன்கள் குவித்து பழக்கப்பட்டவர்கள்.

இப்படி இருக்கும் பொழுது நீங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும் என்பதை மறந்து விடுவீர்கள். இந்த சமயத்தில் உங்களுக்கான எதிராளி உருவாகி வருவார். அவர் உங்களது விளையாட்டை தெரிந்து வைத்திருப்பார். அவர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுவார்!” என்று கூறினார்!