“நீங்க உலக சாம்பியனா? உங்களால உலக கோப்பைக்கு என்ன யூஸ்? இந்தியா கூட கம்பேரிசன் வேற!” – இங்கிலாந்தை காய்ச்சி எடுத்த ரவி சாஸ்திரி!

0
770
Ravi

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 5 தோல்விகள் அடைந்திருக்கிறது.

இங்கிலாந்து அணி 5 தோல்விகள் அடைந்திருக்கிறது என்பதே அதிர்ச்சியான விஷயம். ஆனால் இந்த 5 தோல்விகளுமே படுதோல்விகள் என்பதுதான் இங்கிலாந்து அணி குறித்து மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி தோற்ற எந்த ஆட்டத்திலும் எதிரணிக்கு கொஞ்சம் கூட போட்டியே கொடுக்காமல் முழுவதுமாக சரண் அடைந்து தோற்று இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து அணி பெற்ற ஐந்து தோல்விகளில் இரண்டு தோல்விகள் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக வந்தன. இந்த அணிகளுக்கு எதிராகவும் இங்கிலாந்து சரணடைந்து தோற்றது.

தற்பொழுது இங்கிலாந்து அணி மீதான விமர்சனங்கள் தோல்வி என்பதிலிருந்து விலகி படுதோல்வி குறித்து மாறி இருக்கிறது. மேலும் இங்கிலாந்து போன்ற ஒரு அணி இப்படி சீக்கிரத்தில் தோல்வி அடைகின்ற காரணத்தினால், அது பார்வையாளர்களுக்கும் மற்றும் விளம்பர வருமானத்திற்கும் மிகப்பெரிய சிக்கலை கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீர ரவி சாஸ்திரி கூறும் பொழுது “பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெரிய பேரழிவை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் தோற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 17 ஓவர்கள் மீதம் இருக்கும் பொழுது வென்றது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. மேலும் இலங்கைக்கு எதிராக 30 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து இலங்கை இங்கிலாந்து கொடுத்த இலக்கை 25 ஓவர்களில் எட்டியது. இந்தியாவிற்கு எதிராக 32 ஓவர்களுக்குள் இவர்கள் எட்டு விக்கெட்டை இழந்தார்கள்.

உங்களை நீங்கள் எப்படி உலக சாம்பியன் என்று அழைக்கிறீர்கள்? அதாவது அவர்களின் செயல் திறன் குறித்து அவர்கள் வருத்தப்படவில்லை என்றால் யார் வருத்தப்படுவது? இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் நான் எட்டு அணிகள் என்று சொல்லுவேன். புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணிகளுக்கும் இடையே எட்டு அணிகள் இருக்கிறது.

இங்கிருந்து இங்கிலாந்து தன்னுடைய பெருமைக்காக விளையாட வேண்டும். காரணம் தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் விளையாட முடியும். சாம்பியன் டிராபி போன்ற ஒரு ஐசிசி தொடரில் இங்கிலாந்து போன்ற ஒரு அணி விளையாட முடியாமல் போனால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்!” என்று கூறியிருக்கிறார்!