“மோசமா தோத்துட்டு பழிய இந்தியா மேல போட்டுட்டு இருக்கிங்களா!” – வாசிம் அக்ரம் பாக் பயிற்சியாளர் மேல் கடுமையான தாக்கு!

0
3863
Akram

இந்திய அணி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் அபாரமாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், போட்டிய இறுதிவரை நடைபெறும் ஒருதலைப் பச்சமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று பலராலும் கூறப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் 43 ஓவர்கள் முடிவதற்குள் ஆல் அவுட் ஆன பாகிஸ்தான் அணி, அதற்கு அடுத்து 192 ரன்கள் இழப்பை 33 ஓவர்கள் முடிவதற்குள் இந்திய அணியை எட்ட விட்டு படுதோல்வியை சந்தித்தது.

இதுவரை பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விகளில் இந்த தோல்வி மிகவும் மோசமான ஒன்றாக பதிவாகி இருக்கிறது.

இந்த காரணத்தினால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசும்பொழுது நடைபெற்ற போட்டி ஐசிசி நடத்துவது போல இல்லை பிசிசிஐ நடத்துவது போல இருக்கிறது, பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை, இதுவும் ஒரு காரணம்தான். ஆனால் இதையே நான் சாக்காக கூறப்போவதில்லை என்று கூறியிருந்தார். தற்பொழுது பாகிஸ்தான் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்த அறிக்கை குறித்து எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இது தற்செயலாக நடந்து ஒன்றா? இல்லை இந்த தோல்வியிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்களா? துரதிஷ்டவசமாக உங்களால் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது!” என்று மிகக் காட்டமாக கூறியிருக்கிறார்!