“மீண்டும் 2019 உலக கோப்பை சம்பவத்தை இந்தியாவுக்கு செய்யப் போறிங்களா?” – டிரெண்ட் போல்ட் அதிரடி பதில்!

0
15006
Boult

இன்று நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில், 23 ஓவர்களில் 172 ரன்கள் இழப்பை ஏற்றி அவ்வாறு வெற்றி பெற்றது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து இந்திய அணி உடன் அரையிறுதியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோத இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கான வாய்ப்பு 99 சதவீதம் கிடையாது.

- Advertisement -

இன்றைய போட்டியில் பவர் பிளேவில் புதிய பந்தில் டிரண்ட் போல்ட் மீண்டும் திரும்ப வந்து மிகச் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் கைப்பற்றினார். அவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

கேள்வி: இந்தியாவுடன் செமி பைனலில் நீங்கள் தான் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இது 2019 உலகக்கோப்பை மாதிரியே ரிப்பீட் ஆகிறது. இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் எதிர்கொள்ள விரும்பாத ஒரு அணி நியூசிலாந்துதான். இந்தியாவுடன் நீங்கள் விளையாட இருக்கும் செமி பைனல் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்: அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் போட்டியை நடத்தும் நாடான இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது சிறப்பான ஒரு விஷயம். தற்போது எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்து விட்டதாக உணர்கிறோம். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

- Advertisement -

கேள்வி: அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறிர்கள், லீக் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட போது என்ன விஷயங்கள் கிடைத்தது? வான்கடேவில் விளையாடுவது சாதகமா?

பதில்: இந்தியாவுடன் நிறைய முறை விளையாடி இருக்கிறேன். அவர்கள் தரமான வீரர்கள். மும்பையில் என்ன மாதிரியான நிலைமைகள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு நல்ல விக்கெட் என்று பொதுவான வரலாறு சொல்கிறது.

தர்மசாலாவில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியவது மகிழ்ச்சி. அது முற்றிலும் வேறுபட்ட ஒரு மைதானம். ஆனால் நாங்கள் இந்தச் சவாலுக்கு எங்களுடைய கவனத்தை திருப்புவோம். இந்திய அணி மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டிருந்த போதிலும், முக்கியமான போட்டிகளில் அழுத்தம் வீரர்கள் மேல் பாதிப்படைய வைக்கும். எனவே அதை நாங்கள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

கேள்வி: இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குதல் பாணியில் விளையாடுவது உங்களுக்கு உதவியாக இருக்குமா?

பதில்: நான் முன்பே சொன்னது போல அவர்கள் திறமையான வீரர்கள். அவர்கள் நேர்மறையான கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். ஆமாம் அவர்கள் தைரியமாக ஷாட்கள் விளையாடுவது எங்களுக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கொடுக்கும். அந்தப் போட்டியை எப்படி சமாளிக்க போகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருப்போம்.

நான் முன்பே சொன்னது போல 1.5 பில்லியன் மக்கள் முன்னால் இந்தியாவில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுவதை விட வேறு பெரிய விஷயங்கள் இருக்க முடியாது. போட்டி குறித்து உற்சாகமாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!