இத கவனிச்சிங்களா?.. விராட் கோலி கேப் நம்பரும்.. இன்னைக்கு நடந்த சம்பவமும்!” – பொல்லாக் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!

0
1290
Virat

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று கொல்கத்தா மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன.

புள்ளிப்பட்டியலில் இந்த இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதாலும், இரண்டு அணிகளுமே அதிரடியான வெற்றிகளை பெற்று வருவதாலும், நடப்பு உலக கோப்பையில் இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி திடீரென முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இன்று இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிக்கு 35 ஆவது பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளில் கொல்கத்தா மைதானத்தில் சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கையை சதம் அடித்து சமம் செய்வாரா? என்று ஒரு தனி எதிர்பார்ப்பு நிலவியது.

எனவே இலங்கைக்கு எதிராக மும்பையில் இந்திய அணி விளையாடிய போட்டி முடிந்ததுமே, இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியைச் சுற்றி மீடியாக்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.

இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் விதத்தில் இந்திய அணி தற்பொழுது விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதத்துடன் 326 ரன்கள் குவித்திருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் 49 சதங்கள் என்கின்ற சாதனையை தற்பொழுது சமன் செய்திருக்கிறார். இன்று ஆடுகளத்திற்கு தகுந்தவாறு விளையாடிய அவர் 120 பந்துகள் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலிக்கு தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் 49வது சதத்தை அடிக்க 277 இன்னிங்ஸ் தேவைப்பட்டு இருக்கிறது. சச்சின் 452 இன்னிங்ஸ்கள் எடுத்திருக்கிறார். இவர்களுக்கு இடையே 175 இன்னிங்ஸ்கள் வித்தியாசம் இருக்கிறது.

தற்பொழுது இதை வைத்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க லெஜன்ட் ஷான் பொல்லாக் ” விராட் கோலி கேப் நம்பர் 175. 49 சதங்களை எடுக்க விராட் கோலிக்கும் சச்சினுக்கும் இடையே உள்ள இன்னிங்ஸ் வித்தியாசம் 175. ஆச்சரியமான ஒற்றுமை!” என்று கூறி இருக்கிறார்!