“வெட்கமா இல்லையா?.. குப்பை மாதிரி பேசக்கூடாது..!” – சமி பாக் ஹசன் ராஸாவுக்கு தரமான பதிலடி!

0
3648
Shami

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் வேறு எந்த உலகக் கோப்பை தொடரிலும் செயல்பட்டதை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சு படை அசாதாரண செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடைசி நான்கு போட்டிகளில் முகமது சமி இந்திய பந்துவீச்சுப் படையில் இணைந்த பிறகு தாக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் குறைவான ரன்களை எடுத்தால் கூட, அந்த ரண்களை வைத்துக் கொண்டு வெகு சுலபமாக இந்திய பந்துவீச்சாளர்கள் போராடுகிறார்கள். வெற்றியையும் எளிதாக கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக இதை நிரூபித்தார்கள்.

மேலும் ஆடுகளம் எப்படி இருந்தாலும் கூட எதிரணியை மொத்தமாக முடக்குவதில் சிறப்பாக இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் போட்டியினியாக கருதப்படுகிற தென் ஆப்பிரிக்க அணியை 83 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

இந்திய பந்துவீச்சாளர்களின் இந்த செயல்பாட்டை பார்த்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா உள்ளூர் தொலைக்காட்சியில் பேசும்பொழுது “இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் சிறப்பு பந்து தரப்படுகிறது என்பதாக சந்தேகப்படுகிறேன். மற்றவர்களுக்கு பந்துவீச்சில் இவ்வளவு தாக்கம் கிடைப்பதில்லை. இது குறித்து விரிவான விசாரணை தேவை!” என்பதாக பேசியிருந்தார்.

- Advertisement -

இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், பாகிஸ்தானில் இருந்து வாசிம் அக்ரம் இதற்கு கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இது போன்ற இழிவான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று கேட்டிருந்தார். ஆனாலும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படியான பேச்சுகள் நிற்கவில்லை.

இந்த நிலையில் முகமது சமி ஹசன் ராஸாவிற்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் “இதற்காக வெட்கப்படுகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் இப்படி குப்பை போன்று பேசக்கூடாது. சில சமயங்களில் மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுங்கள். இது உள்ளூர் போட்டி கிடையாது. இது ஐசிசி போட்டி.

வாசிம் அக்ரம் பாய் இது சம்பந்தமாக விளக்கம் அளித்தார். ஆனால் மீண்டும் அப்படியே பேசுகிறீர்கள். உங்களுக்கு உங்கள் நாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை கிடையாதா? உங்களை பார்க்க அதிசயமாக இருக்கிறது!” என்று கடுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்!