“சென்னையில ரஷித்கான விளையாட பயப்படுறியா பாபர்?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கேள்வி!

0
987

ஐசிசி யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது பத்து அணிகள் பங்குபெறும் இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை .

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாதிரி அட்டவணைகளை போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு அனுப்பி இருந்தது ஐசிசி நிர்வாகம் . இதற்கு அனைத்து அணிகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் பற்றி தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் .

- Advertisement -

இதன்படி அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூரில் வைத்து நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருக்கின்றன . அக்டோபர் 24ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணி சந்திக்க இருப்பதாக அந்த அட்டவணையில் இடம் பெற்று இருந்தது .

இந்த மூன்று போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின் தரப்பில் ஆட்சி பணத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த மூன்று போட்டிகளையும் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது . இந்தக் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகிய இரண்டும் நிராகரிப்பு தெரிவித்திருக்கின்றன

இது தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் விமர்சிகர்களும் முன்னால் வீரர்களும் தங்களது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா பாகிஸ்தான் அணியை கடுமையாகச் சாடி இருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர் ” சென்னையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் ஏன் மறுக்கிறது என்று எனக்கு புரியவில்லை . சென்னையின் ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் அணி விளையாட மறுக்கிறதா” ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் ரஷித் கான் மற்றும் ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க பாகிஸ்தான் அணி பயப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும் அந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களால் வெற்றி பெற முடியாது என பாகிஸ்தான் வீரர்கள் நினைக்கின்றார்களா? எனவும் கடுமையான கேள்விகளை முன் வைத்திருக்கிறார் .

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” இதுபோன்று ஒரு கோரிக்கை வைப்பதற்கான எந்த காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார், மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் அகமதாபாத் மைதானத்தில் விளையாட மறுப்பு தெரிவிப்பது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணி தாங்கள் எப்போதும் செய்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று எனக்கு புரியவில்லை . உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இடத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடப்பதே சிறந்தது . ஒரு உலகத்தரம் வாய்ந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாட மறுப்பது ஏன் ? என்ற கேள்வியுடன் தனது பேட்டியை முடித்துக் கொண்டார் .