124 கிலோமீட்டர் வேகத்தில் போடுற நீ பாஸ்ட் பவுலரா? – நட்சத்திர பவுலரை தாக்கிய மேத்யூ ஹைடன்!

0
26904
Hayden

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் வைத்து நடந்து கொண்டு வருகிறது.

இந்தத் தொடரில் முதலில் நடந்து முடிந்திருக்கின்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜாவை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் கடுமையான சில வார்த்தைகளைக் களத்தில் பயன்படுத்தினார்.

அவர் ஆஸ்திரேலியா அணியின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்களுமே நம்பர் 11 பேட்ஸ்மேன்கள்தான் என்று கூறியிருந்தார். மேலும் இதெல்லாம் ரிக்கி பாண்டிங் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக செய்ததுதான் என்றும் சொல்லியிருந்தார்.

தற்பொழுது இதற்கு பதிலடி தரும் விதமாக பேசி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் ” மணிக்கு 124 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிக்கொண்டு இதெல்லாம் தேவையா? இதையெல்லாம் எங்கள் அணியின் டேவிட் வார்னரை வைத்து எங்களால் செய்ய முடியும். ராபின்சன் எல்லாம் ஒரு மறக்க வேண்டிய பிளேயர்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் தன் பெயரை எழுத்ததற்காக ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” நான் 15 வருடங்களுக்கு முன்னால் கூறியதைப் பற்றி தற்பொழுது இவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது சரி கிடையாது. இந்த விவகாரத்தில் என் பெயரை அவர் இழுத்ததை நான் அசாதாரணமாக கருதுகிறேன்.

ஆசஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்றால் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் சீக்கிரத்தில் உணர்ந்து கொள்வார். அவர் எதையும் மிக தாமதமாக புரிந்து கொள்ளக்கூடிய ஆள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது ஆசஸ் டெஸ்ட் தொடரில் களத்திற்கு வெளியேவும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருப்பதால் இந்த முறை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.