இந்த விக்கெட்ல ரெண்டு பேர நம்பினேன். என் நம்பிக்கையை அவங்க காப்பாத்திட்டாங்க – வெற்றி கேப்டன் ஷிகர் தவான்!

0
212
Shikar

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகளில் முதலில் நடைபெற்ற போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன.

டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. கான்வே ஆட்டம் இழக்காமல் 52 பந்தில் 92 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு களமிறங்கிய எல்லா பேட்ஸ்மேன்களும் சரியான பங்கை செய்து கொண்டே வந்தார்கள். ஆனாலும் ஆட்டம் ஒரு மாதிரி சென்னை பக்கமே இருந்தது.

இந்த நிலையில் துஷார் வீசிய 17 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்து லிவிங்ஸ்டன் ஆட்டம் இழக்க ஆட்டம் பஞ்சாப் பக்கம் வந்தது.

ஆனாலும் கடைசி ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய பதிரனா கடைசிப் பந்து வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றார். ஆனாலும் கடைசிப் பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட சிக்கந்தர் ராஸா எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான்
” சென்னை அணியை சென்னையில் வைத்து வீழ்த்தியதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். நாங்கள் விளையாடிய விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தோல்வியிலிருந்து மீள்வதும் விலகுவதும் நமது பக்கத்தின் சிறப்பு தன்மையை காட்டுகிறது.

இதற்கான அனைத்து புகழும் வீரர்களுக்கும் அணி ஊழியர்களுக்கும் சேரும். பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

விக்கெட்டை நான் முதலில் பார்த்த பொழுது கொஞ்சம் ட்ரையாக இருந்தது. ஆனால் பவுன்ஸ் ஆகியது. ஒரு கேப்டனாக லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் இருவரும் அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். எல்லா வீரர்களும் நன்றாக விளையாடியது நல்ல அறிகுறி!” என்று கூறியிருக்கிறார்!