பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்தியாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் அகிப் ஜாவேத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிலும் அதன் அணியிலும் நிறைய மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் சர்வதேச மட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சிறந்த செயல்பாடுகள் இன்னும் கீழேயே இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்புகள் மற்றும் தேர்வுக் குழுவின் பொறுப்புகள், மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் என மொத்தமாக தொடர்ந்து எல்லோரும் மாற்றப்பட்டு கொண்டே வந்தார்கள். தற்பொழுதுதான் சில மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
இதுகுறித்து அகிப் ஜாவேத் கூறும்பொழுது “நான் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை பார்த்து அப்படியே அதை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தேன். நான் இந்திய கிரிக்கெட் வெற்றியின் திட்டங்களை செயல்படுத்த விரும்பினேன். ஆனால் எந்த ஒரு நாட்டு கிரிக்கெட் டீம் வெற்றியும் அதன் தரத்தில் திறமையில்தான் இருக்கிறது”
“நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வாளராகவோ பயிற்சியாளராகவோ அல்லது கேப்டனாகவோ கொண்டு வரலாம். ஆனால் உங்களிடம் தரமும் திறமையும் இல்லை என்றால் எந்த மாற்றமும் வரப்போவது கிடையாது. இந்த இரண்டு விஷயங்கள் தான் ஒரு நாட்டு கிரிக்கெட் வெற்றியின் அடிப்படையானது”
இதையும் படிங்க : U19 ஆசிய கோப்பையை வென்றது பாகிஸ்தான்.. பைனலில் இந்தியா படுதோல்வி.. வைபவ் ஏமாற்றம்
“திறமையை அதிகரிக்க வேண்டுமென்றால் பெஞ்ச் வலிமையை அதிகரித்து, அதிக போட்டிகளை கொடுத்து செய்யலாம். இதற்கு சரியான உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மற்றும் சிஸ்டம் இருக்க வேண்டும். இதெல்லாம் பாகிஸ்தானில் இல்லாததுதான் பிரச்சினையாக இருந்து வந்தது. தற்போது ஓரளவுக்கு சரியான திறமைகளை அடையாளம் கண்டு அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.