இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த விஷயத்துக்கு.. பாகிஸ்தான் கிட்ட உதவி கேட்டு இருக்கு – அகிப் ஜாவேத் தகவல்

0
44
Javed

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய உதவியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் ஆச்சரியப்படும்படியான ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் மற்றும் வணிக ரீதியான எந்த உறவுகளும் இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் ஐசிசி மற்றும் ஏசிசி தொடர்களில் கூட இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் சம்பிரதாய கைகுலுக்கலை தவிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பான மோதல்

இந்த விரிசல் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் எதிரொலித்தது. வைபவ் சூரியவன்சி விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் பவுலர் ஆக்ரோஷமாக கொண்டாட, அதற்கு வைபவ் சூரியவன்சி தன்னுடைய காலணியை பேட்டால் தட்டி பதிலடியாக காட்டி இருந்தார்.

இந்திய சீனியர் வீரர்களிடம் இருந்த நற்பண்புகள் தற்போது ஜூனியர் வீரர்களிடம் இல்லை என பாகிஸ்தான் இளம் அணியின் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது கூறியிருந்தார். மேலும் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் முறையிடப் போவதாகவும் சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆச்சரியமான தகவல்

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அகிப் ஜாவேத் கூறும்பொழுது “நம்மை நாமே சவால் செய்யாத வகையில், சர்வதேச அளவில் நாம் எங்கு இருக்கிறோம், நமது பயிற்சியாளர்கள் எவ்வளவு திறமையானவர்கள், நமது கிரிக்கெட் அமைப்புகள் உண்மையிலேயே எவ்வளவு வலிமையானவை என்பது குறித்து நாம் அறியவே மாட்டோம்”

இதையும் படிங்க : சூரியகுமார் கில் கிடையாது.. அவர் விராட் கோலி மாதிரி.. எனவே இந்த 3 விஷயத்தை பத்தி மட்டுமே பாக்கணும் – முகமது கைஃப் பேச்சு

“நாம் ஏற்கனவே நம்முடைய உயர் செயல்திறன் பயிற்சி முகாமுக்கு வெளிநாட்டு வீரர்களை அனுமதித்திருக்கிறோம். இந்த வகையில் தங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களை மேம்படுத்துவதற்கு இந்தியா நம்மிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உதவி கேட்டு இருக்கும் இந்த செய்தியை இந்தியாவில் பெரிய ஆச்சரியத்தை தற்போது உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -