இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் ஆக திகழ்ந்த விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கு ஏற்கனவே பிசிசிஐ கேப்டன் பதவி குறித்து நம்பிக்கை குறித்து அதற்கு பின்னர் ஏமாற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நம்பிக்கை கொடுத்த பிசிசிஐ
இந்திய அணியின் ஜாம்பவான் வீரராக திகழும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 36 வயதான நிலையில் இன்னமும் அவரது உடல் தகுதி வலுவாக இருப்பதால் இன்னும் நீண்ட காலம் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று விளையாடி இருக்க முடியும். ஆனால் இந்திய அணி சமீப காலமாக ரோகித் சர்மாவின் தலைமையில் டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் அடுத்த இரண்டு வருட டெஸ்ட் சுழற்சிக்கு தகுந்தவாறு விராட் கோலி வசம் கேப்டன் பதவி ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ ஒரு இளம் கேப்டனை எதிர்பார்ப்பதால் விராட் கோலி வசம் மீண்டும் கேப்டன் பதவியை ஒப்படைக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளிவர, உடனடியாக விராட் கோலி டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
ஏமாற்றம் அடைந்த விராட்
ஆனால் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் டுடே பத்திரிக்கையில் வெளிவந்த தகவலின் படி, விராட் கோலிக்கு கேப்டன் பதவியை ஒப்படைக்க பிசிசிஐ உறுதி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின்னர், விராட் கோலியிடம் மீண்டும் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படும் என சூசகமான அறிக்கை கொடுத்ததாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் இறுதியில் அந்த தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறாததால் விரக்தி அடைந்த பிசிசிஐ புதிய கேப்டனை எதிர் நோக்குவதாக கூறி தனது முடிவை மாற்றிக் கொண்டது.
இதையும் படிங்க:பர்சனலா சொன்ன 2 பதில்தான்.. விராட் ஓய்வு பெற சரியான நேரம்னு என்னையே நினைக்க வைத்தது – ரவி சாஸ்திரி
இதனால் சற்று ஏமாற்றம் அடைந்த விராட் கோலி, இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு உடனடியாக டெஸ்ட் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் என்று தெரிகிறது. பிசிசிஐ சொன்ன மாதிரியே விராட் கோலி வசம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருப்பார். ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் வருகிற ஜூன் இருபதாம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.






