இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஜாம்பவான் விராட் கோலி சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழ்ந்த ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஓய்வை அறிவித்த விராட் கோலி
இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு பெற்றவுடன் விராட் கோலி ஓய்வு பெற இருந்ததாகவும் இருப்பினும் பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்தும் விராட் கோலி இதனை ஏற்க மறுத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் விராட் கோலியின் ஓய்வுக்கு வீரர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி கிடையாது என்கிற விதியும் முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. மேலும் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது அவரோடு பணியாற்றிய இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். அதாவது அவர் ஓய்வு முடிவை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எடுத்து விட்டதாகவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் குறித்து ரவி சாஸ்திரி
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும் போது “நான் விராட் கோலியிடம் இதைப்பற்றி அவரது ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பேசினேன். அப்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்து விட்டேன் என அவரது மனது தெளிவாக இருந்தது. இதில் எந்த ஒரு வருத்தமும் கிடையாது விராட் கோலியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது தனிப்பட்ட முறையில் அவரிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்டேன். விராட் கோலி மிகவும் தெளிவாக குறிப்பிட்டார். அவரது மனதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க:கேப்டன் பதவிக்கு நான் தகுதியானு உணர.. விராட் கோலி சொன்ன அந்த வார்த்தைதான் காரணம் – ஆர்சிபி கேப்டன் பட்டிதார்
அப்போது அவர் கூறிய விஷயங்கள் என் மனதிலும் இதுதான் அவர் ஓய்வு பெற சரியான நேரம் என்று நினைக்க வைத்தது. மனம் அவரது உடலுக்கு சொல்லிவிட்டது இது போக வேண்டிய நேரம். விராட் கோலி குறித்து கூற வேண்டும் என்றால், அவரிடம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் இருப்பதாக நினைத்தேன். உங்கள் உடல் அதற்குத் தகுந்தவாறு தகுதியாக இருப்பது போல உணரலாம். மேலும் அணியில் உள்ள பாதி பேரை விட பிட்னஸ் அதிக அளவில் சிறப்பாக இருக்கலாம். ஆனால் மனதளவில் நீங்கள் வறுத்தெடுக்கப்படும் போது அதை உடலுக்குச் செய்தியை அனுப்புகிறது. அப்போது அது உங்களுக்கு தெரியும் இது இதோடு நின்று விடும்” என்று என பேசி இருக்கிறார்.