வேற லெவல் ஆதிக்கம் ; டெல்லியைச் சுருட்டி வீசியது மும்பை!

0
95
WPL

பெண்கள் ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கிறது!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை சுருட்டி வீசிய மும்பை அணி இரண்டாவது போட்டியில் அதே பாணியில் பெங்களூரு அணியை சுருட்டி வீசியது. இரண்டு வெற்றிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் மிக உச்சத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை மும்பை அணி பெற்று இருந்தது!

- Advertisement -

மும்பை அணியை போலவே டெல்லி அணியும் தனது முதல் இரு ஆட்டங்களில் அபார வெற்றியைப் பெற்று, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து, நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் தொடரில் தங்களை பலமிக்க அணியாக நிறுவியது!

இந்த நிலையில் இன்று இந்தத் தொடரின் பலமிக்க இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

கடந்த இரு போட்டிகளாக டெல்லி அணிக்கு சிறப்பாக கிடைத்த துவக்கம் இந்த போட்டியில் அமையவில்லை. துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரண்டு ரண்களில் இஷாக்கால் கிளீன் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்து அலெக்ஸ் கேப்ஸி, மரிசானா கேப் என முன்னணி வீராங்கனைகள் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் உடன் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் இணைந்து அதிரடியான ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். 18 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் அவர் 25 ரன்களை எட்டிய பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க, அங்கிருந்து டெல்லி அணி அப்படியே சரிந்து விழுந்தது.

இதற்கு அடுத்து கேப்டன் லானிங் 41 பந்தில் 43 ரன்கள் உடன் வெளியேற, அதற்குப் பிறகு யாரும் நிலைத்து நிற்கவில்லை. 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டம் இழந்தது. சைக்கா இஷாக் மற்றும் இசி வோங் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீராங்கனைகள் யாஷிகா பாட்டியா மற்றும் கைலி மேத்யூஸ் இருவரும் அபாரமான துவக்கத்தை தந்தார்கள். முதல் விக்கட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், 32 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் யாஷிகா பாட்டிக்கா வெளியேறினார். இதற்கடுத்து மேத்யூஸ் 32 ரன்கள் வெளியேறினார்.

ஏறக்குறைய வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் சிவிர் ப்ரண்ட், கேப்டன் ஹர்மன் பிரீத்கவுர் இருவரும் சேர்ந்து அணியை சுலபமாக வெற்றிக்கு எடுத்துச் சென்றனர். 15 ஓவர்களில் இழப்பை எட்டி மிக எளிமையாக மும்பை அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை மிகப்பெரிய ரன் ரேட்டில் தக்க வைத்துக் கொண்டுள்ளது!