வேற லெவல் ஐடியா.. “இந்தியா இதை செய்ங்க உலககோப்பை உங்களுக்குதான்”- பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

0
194
Odiwc2023

இந்தியாவில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுமையாக இந்த ஆண்டு நடத்தப்பட இருக்கிறது. இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டியின் மூலமாக, இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்குகிறது!

உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய பத்து அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான தயாரிப்புகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எல்லா நாடுகளும் வெகு சீக்கிரத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவ தொடர்களில் விளையாடுகின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் மிடில் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் விளங்கிய ரிஷப் பண்ட் இருவரும் காயத்தின் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார்கள் என்பது பெரிய பின்னடைவாக இருக்கிறது.

எனவே தற்பொழுது இந்திய அணி நிர்வாகம் இந்த இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதற்கான போட்டியில் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் மூவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் இந்த பிரச்சனை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடதுகை துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் மிகவும் ஆக்கபூர்வமான ஒரு யோசனையை முன் வைத்திருக்கிறார். இருக்கின்ற பிரச்சனைக்கு அது மிகவும் சரியான தீர்வாகவும் இருக்கிறது.

இதுகுறித்து சல்மான் பட் கூறும் பொழுது
“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து ஒவ்வொரு வீரர்களும் தனித்தனியாக இருந்தார்கள். அவர்களின் இருவரின் இருப்பை தவறவிட்டார்கள்.

முன்னதாக தோனி மற்றும் பிற முன்னணி வீரர்கள் ஓய்வெடுக்கும் பொழுது கம்பீர், ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்கள் அந்த பொறுப்பை எடுத்து செயல்பட்டார்கள். ஆனால் தற்போதைய வீரர்களால் தங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பாக இதை இவர்கள் சரிப்படுத்தியாக வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தில் புதிய வீரர்கள் பொருந்தி வராவிட்டால், அனுபவ வீரரான சிகர் தவானை, சுப்மன் கில் உடன் துவக்க வீரராக களம் இறக்கி, மூன்று மற்றும் நான்காம் இடங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி வந்தால் மிகவும் சரியாக இருக்கும். இதற்கு அடுத்த இடங்களில் கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வருவார்கள். இது இந்திய அணிக்கு பேட்டிங் யூனிட்டை பலப்படுத்துவதாக அமையும்!” என்று கூறியிருக்கிறார்!