“நேற்றைய போட்டியில் இன்னும் ஒரு சிறப்பான சாதனை” -“ஷேன் வாட்சன் மற்றும் கிறிஸ் கெயிலுடன் சாதனையை பகிர்ந்து கொண்ட கில்”!

0
1286

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உலக சாதனை படைத்தது .

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 களை கொண்ட போட்டிகளில் விளையாடி வந்தது . இதில் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி தற்போது டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் இழந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 234 ரண்களை 20 ஓவர்களில் எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மண் கில் ஒரு நாள் போட்டிகளை தொடர்ந்து இந்த டி20 போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தினை பதிவு செய்தார் . இந்தப் போட்டியில் இவர் 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களின் உதவியுடன் 126 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணிக்காக டி20 டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட்களிலும் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது . இதற்கு முன் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா,கேஎல்.ராகுல்,ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவிற்காக சதம் அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய சதத்தின் மூலம் இந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார் கில் .

நேற்றைய டி20 போட்டியில் சுப்மண் கில் அடித்த சதத்தின் மூலம் இன்னொரு சாதனை பட்டியலிலும் இடம் பெற்று இருக்கிறார் கில் . அதாவது அண்டர் 19 போட்டிகள் தொடங்கி டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச டி20 என எல்லா வடிவங்களிலும் சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் சுப்மண் கில். இதற்கு முன் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் ஆகியோர் நிகழ்த்தி இருக்கின்றனர் .

- Advertisement -

நேற்றைய டி20 போட்டியின் சதத்தோடு இந்த சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் கில். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து இருந்தார் சுப்மன் கில். கடந்த வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் அண்டர் 19,டெஸ்ட் கிரிக்கெட் ,ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என எல்லா போட்டிகளிலும் சதம் அடித்து சிறப்பான சாதனையை செய்திருக்கிறார் இந்தியாவின் வருங்கால நட்சத்திரம் சுப்மன் கில்