ஆஸிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. அஷ்வின் ருதுராஜுக்கு வாய்ப்பு.. கேஎல்.ராகுல் கேப்டன்.. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

0
15599
ICT

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்திருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்தியாவிற்கு வந்து இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நேற்று ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆஸ்திரேலியா அணியில் தென் ஆப்பிரிக்க தொடரில் இடம் பெறாத எல்லா நட்சத்திர வீரர்களும் திரும்பினார்கள்.

மேலும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத மார்னஸ் லபுசேன் இந்திய தொடரில் இடம் பெற்றார். காயத்தால் டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது கடினமாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, இந்த மாதம் செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் பந்த்ரா மைதானத்தில் நடக்க இருக்கும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடக்க இருக்கும் முதல் ஒருநாள் போட்டிக்காக கிளம்பி இருக்கிறது.

அதே சமயத்தில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிப்பு சற்றுமுன் இந்தியத் தேர்வுக் குழுவால் வெளியிடப்பட்டது. இதில் மூன்று போட்டிகளுக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு ஒரு அணியும், தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா மாதிரியான முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது போட்டிக்கு எல்லா நட்சத்திர வீரர்களும் திரும்புகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக கேஎல் ராகுல் தொடர்கிறார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மூன்றாவது போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் வருகிறார்கள். மூன்றாவது போட்டிக்கான அணியில் ருத்ராஜ் மற்றும் திலக் வர்மா ஆகிய இளம் வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அக்சர் படேல் மூன்றாவது போட்டிக்கு வருகிறார்.

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி:

கே.எல்.ராகுல் (கே & வி. கீ ), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா . ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (சி), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), சுப்மன் கில், விராட்
கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.