விராட் கோலி ஆட வரதுக்கு முன்னாடி பெரிய தப்பு பண்ணிட்டாரு.. நிலைமை மோசமா இருக்கு – அனில் கும்ப்ளே கருத்து

0
327
Virat

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும் என அனில் கும்ப்ளே கூறி இருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று விராட் கோலி மிச்சல் சான்ட்னர் பந்துவீச்சில் மிகவும் மலிவான முறையில் விக்கெட்டை இழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து ஏமாற்றும் விராட் கோலி

சில ஆண்டுகளாக விராட் கோலி ஆட்டத்தில் எப்போது அவுட் ஆவார் என்று நம்பிக்கை இல்லாமல் இருப்பது பெரிய கவலை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. அவர் 30 ரன்கள் எடுத்தாலும் கூட செட்டில் ஆகிவிட்டார் என்று நம்ப முடியாத அளவுக்குதான் இருக்கிறது.

இன்று ஒரு புல்டாஸ் பாலை ஸ்வீப் ஷாட் அடிப்பதா அல்லது தடுப்பதா என்று புரியாமல் கோட்டை விட்டு கிளீன் போல்ட் ஆனார். மேலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி இந்திய அணிக்கு வர, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் நேரடியாக இந்திய அணிக்கு இந்த சீசனில் உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி இதை செய்திருக்கலாம்

இதுகுறித்து பேசி இருக்கும் அணில் கும்ப்ளே கூறும் பொழுது ” விராட் கோலி இந்திய அணிக்கு விளையாடுவதற்கு முன்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால் நிச்சயம் அது அவருக்கு பயன்ப்பதாக இருந்திருக்கும். வலையில் பயிற்சி செய்வதை விட போட்டியில் விளையாடி கிடைப்பது பெரிய பயிற்சியாக இருக்கும்.ஆனால் விராட் கோலி சுழல் பந்துவீச்சில் தடுமாறுவதற்கு இது மட்டுமே காரணம் கிடையாது”

இதையும் படிங்க : 55 வருடம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் நடந்த அரிய நிகழ்வு.. நியூஸி இணைந்த வினோதம்

“விராட் கோலி விளையாட வரும் பொழுது சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது அவர் ஆட்டம் இழந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியாவில் சில ஆண்டுகளாக சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகம் இருக்கும் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விராட் கோலி ஆட்டம் இழந்தது சுழல் பந்துவீச்சு குறித்து அவருக்கு இருக்கும் பிரச்சனையால் மட்டும் இல்லை. நவீன கால பேட்டர்களுக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் கூட சோதனையாக அமைந்து விடுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -