55 வருடம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் நடந்த அரிய நிகழ்வு.. நியூஸி இணைந்த வினோதம்

0
126
Santner

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 55 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் அரிய நிகழ்வு நடந்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுக்க, இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

- Advertisement -

ஏழுக்கு ஏழு என பதிலடி

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டும் என்று இருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசி அந்த அணியை கட்டுப்படுத்தினார். மேலும் 59 ரன்கள் கொடுத்து ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இது தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 156 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 38, ஜெய்ஸ்வால் 30 கில் 30 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சான்ட்னர் 53 ரன்கள் தந்து 7 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இரண்டு இன்னிங்ஸில் 19 விக்கெட்

தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விழுந்த 20 விக்கெட்டில் ரோகித் சர்மா விக்கெட் மட்டுமே டிம் சவுதி வேகப்பந்துவீச்சாளரால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மற்ற 19 விக்கெட்டுகளும் இரண்டு அணிகளின் சுழல் பந்துவீச்சாளர்களாலும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இந்திய மண்ணில் சுழல் பந்துவீச்சாளர்களால் இரண்டு இன்னிங்ஸ்கலில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது நிகழ்வாகும். மேலும் 55 வருடம் கழித்து நடைபெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : ஒரே 1 ரன்.. 8 விக்கெட்.. ஆஸி பெர்த்தில் நடந்த வினோத போட்டி.. 9 சர்வதேச பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் சுழல் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய அதிக விக்கெட் :

1952 – இந்தியா-இங்கிலாந்து – 20 விக்கெட் – கான்பூர்
1969 – இந்தியா-நியூசிலாந்து – 19 விக்கெட் – நாக்பூர்
2024 – இந்தியா-நியூசிலாந்து – 19 விக்கெட் – புனே

- Advertisement -