தோனி உங்களுக்கான நேரம் வந்துருச்சு.. இப்ப இத மட்டும் செய்யுங்க திரும்ப அசத்தலாம் – அனில் கும்ப்ளே அறிவுரை

0
265
Kumble

நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான நிலையில் இருக்கும் சிஎஸ்கே அணி அடுத்து என்ன செய்தால் ஓரளவுக்கு கௌரவமான நிலையை எட்ட முடியும் என இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் மோசமாக செயல்பட்டு இருக்கின்ற காரணத்தினால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. சிஎஸ்கே அணியின் 16 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக பத்தாவது இடத்தில் தொடர்ச்சியாக இருந்து வருவது ரசிகர்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணி என்ன செய்யலாம்?

தற்போதைய நிலையில் சிஎஸ்கே அணி முழுவதுமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இங்கிருந்து அவர்கள் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை செய்யலாம். அதன் மூலம் வீரர்களின் திறமையை தெரிந்து கொண்டு அதில் யாரை அடுத்த வருடத்திற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்யலாம்.

மேலும் தங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் அடுத்த வருடம் யாரை கழட்டி விடலாம், யாரை தொடர்ந்து எடுத்துச் செல்லலாம் என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் எஞ்சி இருக்கும் போட்டிக்கு எந்த வெளிநாட்டு வீரரை வைத்து விளையாடுவது சரியானதாக இருக்கும் என்கின்ற முடிவை எடுக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

- Advertisement -

தோனி இந்த வழியில் வரவேண்டும்

இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசும் பொழுது “ரச்சின் ரவீந்தரா ஒரு அற்புதமான திறமைசாலி. ஆனால் அவர் இந்த வடிவு கிரிக்கெட்டில் கொஞ்சம் அவசரமாக தெரிகிறார். ஒருவேளை அவருக்கு மூன்றாவது இடம் பொருத்தமானதாக இருக்கலாம். அதே சமயத்தில் சிவம் துபேவை தாண்டி மிடில் ஆர்டரில் வேறு யாரும் பலமாக இல்லை. ஆனால் மத்ரே மற்றும் பிரிவீஸ் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவார்கள்” என்பது பாசிட்டிவ்வானது.

இதையும் படிங்க : சிஎஸ்கேல அடுத்த வருஷம் இந்த பெரிய தலைகள் எதுவும் இருக்காது.. வெளிய அனுப்பிடுவாங்க – சேவாக் பேட்டி

“அதே சமயத்தில் கேப்டன் தோனி பத்திரனாவை தாண்டி சிந்திக்கத் தொடங்க வேண்டும். நாதன் எல்லீஸ் அனுபவமிக்க டெத் ஓவர் பவுலராக இருக்கிறார். ஆனால் அவருக்கு முதல் போட்டிக்கு பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை. இன்னும் ஐந்து ஆட்டங்கள் மீதம் இருப்பதால், இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை கொடுக்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் இது சரியான நேரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்

- Advertisement -