இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இத செய்யலனா கஷ்டம்.. தரம் குறைஞ்சிடுச்சு – 1452 விக்கெட் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பேச்சு

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாம் இன்னிங்ஸில் சதம் அடித்த விராட் கோலி அடுத்து இரண்டாவது டெஸ்டிங் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக விளையாடி ஏமாற்றம் கொடுத்தார். இதனால் மீண்டும் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து பேச்சுகள் கிரிக்கெட் உலகில் அதிகரித்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 1452 விக்கெட்டுகள்

1970 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் பேட்மேன்களை பந்துவீச்சால் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் ஆண்டி ராபர்ட்ஸ் மிகவும் முக்கியமானவர். இவர் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் என ஒட்டுமொத்தமாக சேர்த்து 1452 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

தற்போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அவர் அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் தரம் மிகவும் குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி இதை செய்ய வேண்டும்

விராட் கோலி கடந்த ஐந்து ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்து வருவது குறித்து உணர வேண்டும் என்றும், இதற்காக அவர் லாங்கர் வெர்ஷனில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீடித்த பார்ம் இருந்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து ஆண்டி ராபர்ட்ஸ் கூறும் பொழுது “இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய அணி மீண்டு வருமா என்று சொல்ல முடியாது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதில் சரியான முறையில் இருக்க வேண்டும்.உங்கள் சிறந்த பேட்மேன்களில் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் போராடி வருகிறார்”

இதையும் படிங்க : ரிஷப் பண்ட செஞ்சதை பார்த்து மிரண்டுட்டேன்.. 2 ரெண்டு வருஷமா இங்க இதான் போகுது – ஹாரி புரூக் பாராட்டு

“விராட் கோலி விளையாட்டின் லாங்கர் வெர்சனில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட பார்ம்க்கு கவனம் செலுத்தினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவிக்க முடியும். இப்படியான சிறந்த பேட்ஸ்மேன் ரன்கள் எடுக்க போராடிக் கொண்டிருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் ஒரே மாதிரியாக இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts