இங்கிலாந்து அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி புரூக் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் பேட்டிங் அணுகுமுறையை பெரிய அளவில் பாராட்டி பேசி இருக்கிறார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு ஹாரி புரூக் அதிரடி பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றம்
இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் போல டெஸ்ட் கிரிக்கெட்டை அடங்கி வருகிறது. இங்கிலாந்து அணியின் இந்த அதிரடி பேட்டிங் அணுகுமுறையின் காரணமாக உலக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளிலும் அவர்களது தாக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. தற்பொழுது இது இந்திய அணியும் ஊடுருவியது சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தியும் இருக்கிறது.
அதே சமயத்தில் இந்த அச்சம் இல்லாத டெஸ்ட் பேட்டிங் முறைக்கு சமீப காலத்தில் முதல் உதாரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் பந்தையே இறங்கி வந்து பவுண்டரி அடித்தார். மேலும் ரிவர்ஸ் ஸ்கூப் முறையில் விளையாடி ஒரு பவுண்டர் அடித்தார்.
ரிஷப் பண்ட் வழிதான் எங்கள் வழி
இந்த நிலையில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஜோ ரூட் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த இடத்தில் அதிக ரன்கள் குவித்தவராக இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் இருந்து வருகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு அதிரடி சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இங்கிலாந்து தொடரை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : ரோகித் கம்பீர் அந்த விஷயத்தில் என்னமோ செய்யட்டும்.. நான் எதுவும் பேச மாட்டேன் – கபில் தேவ் பேச்சு
தற்போது ஹாரி புரூக் ரிஷப் பண்ட் பேட்டிங் முறை குறித்து பேசும் பொழுது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அச்சமற்ற முறையில் ஆடுகளத்தில் பேட்டிங் செய்த விதத்தைப் பார்த்தீர்களா? அப்படி முதல் பந்தில் இருந்தே தைரியமான முறையில் விளையாட வேண்டும் என்பதை தான் நாங்கள் கடந்த இரண்டு வருடமாக இங்கிலாந்து அணியில் செய்து வருகிறோம். நாங்கள் அதிரடியாக தைரியமாக ரன்கள் எடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






