கோலிக்கு பணம் கோடில கொட்டுது பேசுவாரு.. ஆனா வெஸ்ட் இண்டீஸ் நிலைம அப்படி கிடையாது – ரசல் பேச்சு

0
707
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசிய கருத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆன்ட்ரே ரசல் மாறுபட்ட கருத்தை முன் வைத்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய அவருக்கு முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் கிடைத்திருக்கிறது. தற்போது அவர் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் மேலானது

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு மேத்யூ ஹைடனிடம் பேசிய விராட் கோலி ஐபிஎல் தொடரை விட டெஸ்ட் கிரிக்கெட்டை ஐந்து மடங்கு மேலானதாக குறிப்பிட்டார். மேலும் தான் இளம் வயதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய ஆர்வத்தைக் கொண்டிருந்ததாகவும், இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பொழுது அது டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கும் என பல முன்னால் வீரர்களும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரவேற்பு மிகவும் குறைவாகி வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க மைதானத்திற்கு மக்களை அழைத்து வரக்கூடிய சக்தி விராட் கோலிக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரசல் மாறுபட்ட கருத்து

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ரசல் கூறும் பொழுது ” நீங்கள் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் பொழுது, இந்த கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களை பார்த்துக் கொள்ளும் விதம் வேறு. இது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு கிடையாது. இந்த மூன்று நாடுகளில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட கூடிய வீரர்கள் பெரிய ஒப்பந்தங்களை பெறுகிறார்கள். எனவே அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள்”

இதையும் படிங்க : விராட்டை விட சச்சின்தான் அந்த விஷயத்தில் பாவம்.. ஆனா தலை வணங்க லிமிட் வெச்சிருந்தாரு – சேவாக் பேச்சு

“ஆனால் 50 அல்லது 100 டெஸ்ட் போட்டிகளில் கூட நீங்கள் விளையாடிய பிறகும் பெரிய அளவில் உங்களுக்கு எதுவுமே கிடைத்திருக்காது. நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு இதில் கிடைத்தது எதுவும் இல்லை என்பதை உணர்வீர்கள். மேலும் வெளிப்படையாகவே உங்கள் குடும்பத்திற்கான ஒரு வசதியான வாழ்க்கையை உருவாக்கத்தான் விரும்புவீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -