விராட்டை விட சச்சின்தான் அந்த விஷயத்தில் பாவம்.. ஆனா தலை வணங்க லிமிட் வெச்சிருந்தாரு – சேவாக் பேச்சு

0
155
Sehwag

ஐபிஎல் வரலாற்றில் பதினெட்டாவது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் விராட் கோலியை விட சச்சினுக்கு அதிக காலம் பிடித்துள்ளதாக வீரேந்தர் சேவாக் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே ஏதாவது ஒரு விஷயம் எட்டாவதாக இருந்து பெரிய மன உளைச்சலை உருவாக்கி இருக்கிறது. இதைக் குறிப்பிட்டு வீரேந்தர் சேவாக் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சச்சின் விராட்டின் பிரச்சனை

விராட் கோலி இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் மிகப்பெரிய வீரராக உயர்ந்திருந்த போதும் கூட அவருக்கு வருட வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடர் பெரிய சோதனையாக அமைந்திருந்தது. அவருடைய அணி தொடர்ந்து தோல்வி அடைந்ததின் காரணமாக தனிப்பட்ட முறையில் நிறைய கேலி கிண்டல்கள் அவமானம் என வருட வருடம் மன உளைச்சலை சந்திக்க வேண்டிய இருந்தது. இது முடிவுக்கு வருவதற்கு அவருக்கு 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

அதே சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரரான பிறகும் உலகக் கோப்பையை வெல்ல முடியாதது அவருக்கு பெரிய சோகமாக இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இருந்து இறுதியாக 2011ம் ஆண்டில்தான் அவரது கனவு நிறைவேறியது. இதற்காக சச்சின் மனம் தளராமல் 22 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கோப்பையுடன் தலைவணங்கினார்

இதுகுறித்து சேவாக் பேசும் பொழுது “விராட் கோலி ஐபிஎல் கோப்பைக்காக 18 வருடங்கள் காத்திருந்தார். ஆனால் சச்சின் 1989 முதல் 2011 வரை 22 ஆண்டுகள் காத்திருந்தார். இந்த விஷயத்தில் விராட் கோலியை விட சச்சினின் காத்திருப்பு மிகவும் பெரியது. இந்த நிலையிலும் சச்சின் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. உலகக்கோப்பை உடன் தலை வணங்க மட்டுமே அவர் முடிவு செய்து இறுதியாக அதை பெற்றார்”

இதையும் படிங்க : 1000 ரன் கூட போதாது.. இங்கிலாந்துல வெற்றி பெற இத நாங்க செய்யப் போறோம் – கம்பீர் பேட்டி

“இப்போது விராட் கோலி நிம்மதியாக இருப்பார். அவர் ஐபிஎல் தொடரில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம். ஒரு வீரர் எப்பொழுதும் கோப்பைகளை வெல்வதற்குதான் விளையாடுகிறார். இடையில் பணம் வரும் போகும் அதுவெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. ஆனால் கோப்பைகளை வெல்வதுதான் முக்கியம். ஐபிஎல் கோப்பைக்கான விராட் கோலியின் காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனில் பேட்டிங்கில் அவர் பெரிய பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -