நான் நேற்று அதிரடியா விளையாடறதுக்கான காரணமே வேற.. கம்பீர் தந்த அந்த வாய்ப்புக்கு நன்றி – ரசல் பேட்டி

0
47
Russell

நேற்று டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக கே கே ஆர் அணியின் துவக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் பேட்டிங்கில் ஆடினார். இறுதிக்கட்டத்தில் ஆன்ட்ரே ரசல் 19 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மூன்றாவது வீரராக வந்த 18 வயது இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்சி 27 பந்தில் 54 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் 8 பந்தில் ரிங்கு சிங் 26 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

இதன் காரணமாக நேற்று கேகேஆர் அணி 272 ரன்கள் குவித்து, டெல்லி அணியை 166 ரன்களில் சுருட்டி, 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக கேகேஆர் அணிக்கு பெரிய ரன் ரேட் கிடைத்திருக்கிறது. அவர்கள் தங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு, பெரிய ரன் ரேட்டையும் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் தன்னுடைய அதிரடி பேட்டிங் பற்றி சுனில் நரைன் உடன் பேசிய ஆன்ட்ரே ரசல் கூறும் பொழுது “நரைன் நேற்று நீங்கள் அதிரடியாக விளையாடி அடித்து நொறுக்கியது தான் நான் கடைசியில் வந்து அதிரடியாக விளையாட எனக்கு உத்வேகம் அளித்தது. நான் சில பந்துகளை விக்கெட்டின் வேகத்தை பயன்படுத்தி அடிக்க நினைத்தேன். நேற்று கம்பீர் எனக்கும் வாய்ப்பு அளித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் நூறு ரன்களுக்கு மேல் பெற்ற வெற்றி என்பதுதான். நல்ல ரன் ரேட் கிடைத்திருக்கிறது.

இதேபோல் அறிமுகமான ரகுவன்சி சிறப்பாக விளையாடியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்ன மாதிரியான விதத்தில் விளையாடினார் என்பதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன். ஷாருக் போன்ற ஒரு அற்புதமான உரிமையாளருக்கு முன்னால், அவர் இப்படி செயல்பட்டு இருப்பது இந்த ஐபிஎல் சீசனில் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.

ஆன்ட்ரே ரசலுக்கு பதில் அளித்து பேசிய சுனில் நரைன் கூறும் பொழுது “ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர்கள் பந்தை நன்றாக ஸ்விங் செய்து கொண்டு இருந்தார்கள். எனவே எங்கிருந்து பவுண்டரி வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு இரண்டு பந்துகளை சரியாக கனெக்ட் செய்தவுடன்,பவுலர்கள் பல இடங்களில் பந்தை மாற்றி வீச ஆரம்பித்தார்கள். இதற்குப் பிறகு அடிப்பது எளிதானது.

- Advertisement -

இதையும் படிங்க : 272 ரன் சேஸ்.. ரிஷப் பண்ட் தயாராக இருந்தார்.. நேற்று களத்தில் நடந்தது இதுதான் – ரிக்கி பாண்டிங் விளக்கம்

நேற்று ரகுவன்சி தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் வலைகளில் தான் என்ன செய்தேன் என்பதையும் காட்டி இருக்கிறார். அவர் கடினமாக உழைக்கிறார். கடினமாக பேட்டிங் பயிற்சி செய்கிறார். மேலும் அவருடைய வலிமையிலிருந்து பலமாக உருவாகி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.