நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியில் ஐபிஎல் விதிகள் மீறப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்கள், இளம் வீரர் ரகுவன்சி 32 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 120 மட்டுமே எடுத்து சுகர் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
ரகானே வைத்த கோரிக்கை
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொந்த மைதானத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதற்கு அடுத்து கேப்டன் ரகானே தங்களுக்கு சொந்த மைதானத்தில் தங்களிடம் இருக்கும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனால் இந்த மைதானத்தின் ஆடுகள அமைப்பாளர் சுஜன் முகர்ஜி தான் இருக்கும் வரையில் அப்படி செய்ய முடியாது என்று கூறியிருந்தார். பிறகு இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட ஆடுகளம் மாற்றம்
இந்த நிலையில் நேற்று ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அத்துடன் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் காணப்பட்டது. ரகானே வைத்த கோரிக்கையால் ஆடுகளம் கொஞ்சம் சுழல் பந்துவீச்சு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டது என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதன் காரணமாக ஹைதராபாத் அணி திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது என்று பேசப்படுகிறது.
இதையும் படிங்க : CSK s DC.. சிஎஸ்கேவின் புதிய மாஸான உத்தேச பிளேயிங் XI.. 2 மாற்றம் வேற லெவல் எபெக்ட்.. வெற்றி கிடைக்குமா?
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆடுகள அமைப்பில் எந்த ஒரு அணி நிர்வாகமும் தலையிடக்கூடாது என்பதுதான். இந்த நிலையில் ரகானே ஆடுகளம் அமைப்பது தொடர்பாக பேசியதும், அடுத்த போட்டியிலேயே ஆடுகளம் வழக்கம் போல் இல்லாமல் மெதுவாக மாறியதும், ஐபிஎல் விதிகளுக்கு எதிராக இருப்பதாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது தற்போது கொஞ்சம் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.






