நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை சிஎஸ்கே அணி மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமைந்தால் வலிமையாக இருக்கும்? என பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. தொடர்ந்து அசாம் கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போராடி தோற்றது. இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
சரி செய்யப்பட வேண்டிய இடங்கள்
தற்போது சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டரில் ராகுல் திரிபாதியின் துவக்க இடத்திற்கு சீராக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறது. ராகுல் திரிபாதி மிகவும் தடுமாற்றத்தில் இருக்கின்ற காரணத்தினால் பவர் பிளேவில் சிஎஸ்கே அணிக்கு எதிர் பார்த்த ரன்கள் வருவதில்லை. டி20 கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறை மாறி இருக்கின்ற காரணத்தினால் சிஎஸ்கே அணிக்கு இது பெரிய பின்னடைவாக மாறியிருக்கிறது.
அடுத்து பவர் பிளேவில் கலில் அகமது மிகவும் தாக்கத்தை கொடுக்க கூடிய அளவுக்கு சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பவர் பிளேவில் அவருக்கு நல்ல முறையில் சப்போர்ட் செய்யக்கூடிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. இந்த இடத்திற்கு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்துவதால் ரன்கள் நிறைய செல்கிறது. எனவே இந்த இரண்டு இடங்களையும் சிஎஸ்கே அணி சரியான வீரர்களை வைத்து நிரப்பினால் வலிமையான பிளேயிங் லெவனை உருவாக்க முடியும்.
சிஎஸ்கேவின் புதிய பிளேயிங் லெவன்
எனவே சிஎஸ்கே அணியின் துவக்க இடத்திற்கு ராகுல் திரிபாதி நீக்கப்பட்டு, ஆசிய சூழ்நிலையில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேனான இடதுகை தொடக்க ஆட்டக்காரர் கான்வே கொண்டு வரப்பட வேண்டும். தற்போது இவர் கொஞ்சம் ஃபார்மில் இல்லாவிட்டால் கூட, சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் மற்றும் இவருடைய சொந்த கிரிக்கெட் அனுபவம் ஃபார்முக்கு உடனடியாக திரும்ப உதவி செய்யும். இவருடைய அனுபவம் மற்றும் திறமை டாப் ஆர்டரில் அவசியம்.
இதைத்தொடர்ந்து பவர் பிளேவில் கலில் அகமதுக்கு நல்ல சப்போர்ட் தரக்கூடிய அளவில் முழுமையான வேத பந்துவீச்சாளரான அன்சூல் காம்போஜ் கொண்டு வரப்பட வேண்டும். இவர்கள் இருவரையும் வைத்து ஐந்து ஓவர்கள் பவர்பிளேவில் பந்து வீசலாம். நல்ல முறையில் சென்றால் ஆறு ஓவர்களும் வீச வைக்கலாம். இதன் மூலம் அஸ்வினை பவர் பிளேவுக்கு வெளியில் நகர்த்தலாம். இந்த இரண்டு மாற்றத்தால் பேட்டிங் மற்றும் பலிங் யூனிட் இரண்டுமே வலிமை அடையும்.
இதையும் படிங்க: அதிக பணம் கொடுத்தா.. எல்லா போட்டியிலும் அதிக ரன்கள் அடிக்கணும்னு அவசியம் இல்லை – வெங்கடேஷ் ஐயர் பேட்டி
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: கான்வே, ரச்சின் ரவீந்தரா, ருதுராஜ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், அன்சூல் காம்போல், நூர் அகமத், கலில் அகமத் மற்றும் இம்பேக்ட் பிளேயராக மதிஷா பதிரனா.






