இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்வதற்கு கேப்டன் கில் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுக்க, இதற்கு அடுத்த பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றது. மேலும் இந்திய அணி 160 ஓவர்கள் விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் அடுத்த பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரது விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையில் கேஎல் ராகுல் மற்றும் தில் இருவரும் நேற்று பேட்டிங் செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் இந்த ஜோடி நேற்று இரண்டு செஷன் முழுவதுமாக விளையாடி விக்கெட் ஏதும் கொடுக்காமல் அசத்தியது. தற்போது கேஎல்.ராகுல் 87, கேப்டன் கில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி 63 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து இருக்கிறது. மேலும் 137 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
இந்த போட்டியை பொறுத்தவரையில் இன்னும் 90 ஓவர்கள் மீதம் இருக்கிறது. மேலும் இன்னும் 13 ஓவர்கள் கழித்து புதிய பந்து எடுக்கப்பட இருக்கிறது. நேற்று பந்து வீசாத பென் ஸ்டோக்ஸ் இன்று பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கவும் படுகிறது. இந்திய அணி புதிய பந்தில் விக்கெட் கொடுக்காமல் 20 ஓவர்கள் விளையாடுவது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தால்.. இந்திய அணி பும்ராவை சும்மா விடாது.. பாவம் நல்லா மாட்டிக்கிட்டாரு – இங்கி நாசர் ஹுசேன்
மேலும் 131 ரன் மட்டுமே பின் தங்கி இருப்பதால் இதை ஒன்றரை செஷனில் எடுத்து விட முடியும். மேற்கொண்டு இந்திய அணி எடுக்கும் ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக கொடுக்கப்படும். இந்த வகையில் இந்திய அணி குறைந்தது இன்று 75 ஓவர்கள் விளையாடும் பொழுது, இந்த போட்டியை இந்திய அணியால் டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக இதே மைதானத்தில் மழையின் காரணமாக ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டி டிராவில் முடிவடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.