இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்லும் நிலையில் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் உசேன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் தற்போது நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 358 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு தங்களது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 669 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் நேற்று நடைபெற்று முடிந்த நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட் இழந்தாலும் அதற்குப் பிறகு நிலைத்து நின்ற கேப்டன் கில் மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
இரண்டு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் இந்த போட்டி டிராவை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே இந்திய அணி பின் தங்க இருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் பும்ரா அடுத்த போட்டியில் எப்படி விளையாடாமல் இருக்க முடியும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் உசேன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொடரின் ஆரம்பத்தில் பும்ரா 3 போட்டிகள் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பும்ரா தான் காரணமா?
இதுகுறித்து அவர் கூறும் போது “மான்செஸ்டர் போட்டி டிராவில் முடியும் போது பும்ராவை இந்திய அணி நிச்சயமாக விட்டு விடுமா? பும்ரா விளையாடாத போட்டியில் வெற்றி பெற்றதாகவும், அவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததாகவும் மக்கள் கூறுகிறார்கள். அந்த இரண்டாவது போட்டியில் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் நன்றாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைய நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க:19 வருடம்.. பாகிஸ்தானின் ஆசிய சாதனை.. கில் உடைத்து படைத்த மெகா ரெக்கார்ட்.. டிராவுக்கு நல்ல வாய்ப்பு
அவர் விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைவதற்கு அவரது பந்துவீச்சு காரணம் கிடையாது என்று நேர்மையாக சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார். இந்த போட்டியில் இந்திய அணி டிராவில் முடித்தால் அடுத்த போட்டிக்கு பும்ரா விளையாடுவாரா? அல்லது அவருக்கு பதிலாக வேறு ஒரு வந்து வீச்சாளரை இந்திய நிர்வாகம் பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






