அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங்குக்கு தேர்வுக் குழு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டியது இருக்கிறது.
தற்போது இருவரும் சர்வதேச கிரிக்கெட் பெரிதாக விளையாடவில்லை. இஷான் கிஷான் கடந்த ஆண்டிலேயே இந்திய அணிகள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். மேலும் ரிங்கு சிங் ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் சில பந்துகளை மட்டுமே விளையாடினார்.
நியூசிலாந்து ஒருநாள் தொடர்
இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு டி20 உலக கோப்பைக்கு முன்பாக இது சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் கடினம். முதல் மூன்று போட்டிகளை இந்திய அணி வென்றால் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்களை தேர்வு செய்து விளையாட வைக்கலாம். இதன் மூலம் இவர்கள் சீக்கிரத்தில் இந்திய அணியுடன் இணைந்து இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு சர்வதேச போட்டிப் பயிற்சி கொஞ்சம் கிடைக்கும்.
கிடைக்கும் முக்கிய விஷயம்
மேலும் இந்திய ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இரண்டு அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள். இவர்களிடம் இருந்து இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறந்த ஆலோசனைகளை பெற முடியும். இது அவர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் முக்கியமான விஷயமாக இருக்கும்.
இதையும் படிங்க : நேத்து எங்களுக்கு நடந்தத தோனி ஏற்கனவே செஞ்சி இருக்கார்.. அப்ப அவர் அங்கே இருந்தார் – பாப் டு பிளேசிஸ் பேச்சு
எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாகவே ஒரு நாள் தொடரில் இந்த இரண்டு வீரர்களையும் தேர்வுக் குழு தேர்வு செய்ய வேண்டும். ஒரு நாள் உலகக் கோப்பைக்கு இன்னும் நாட்கள் நிறைய இருப்பதால், அது குறித்து யோசிக்காமல் இவர்களை மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும். கிரிக்கெட் வல்லுநர்கள் தற்போது இது குறித்து வலியுறுத்தி வருகிறார்கள்.






