நேத்து எங்களுக்கு நடந்தத தோனி ஏற்கனவே செஞ்சி இருக்கார்.. அப்ப அவர் அங்கே இருந்தார் – பாப் டு பிளேசிஸ் பேச்சு

0
52
Dhoni

நேற்று சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் சூப்பர் ஓவருக்கு சென்ற ஒரு போட்டியில் மகேந்திர சிங் தோனி குறித்து பாப் டு பிளேசிஸ் பாராட்டி பேசி இருக்கிறார்.

தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் பாப் டு பிளேசிஸ் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று இந்த அணி டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

பரபரப்பான போட்டி

முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்திருந்தன.

இந்த நிலையில் கடைசி பந்தை சந்தித்த ஈதன் போஸ் பந்தை அடிக்க தவறிவிட்டார். பந்து டிக்கெட் கீப்பர் டோனவன் பெரிரா கைகளுக்கு சென்றது. அவர் ஏற்கனவே தன் கையில் இருந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸில் ஒன்றை கழட்டி வைத்திருந்தார். இதனால் பந்தை பிடித்த அவர் எளிதாக ஸ்டெம்பை அடித்து ரன் அவுட் செய்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

ஏற்கனவே பார்த்த விஷயம்

இதுகுறித்து பேசி உள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் கூறும்பொழுது “இப்படி ஒரு போட்டி நீண்ட நாட்களுக்கு முன்னால் நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஸ்டெம்புகளுக்கு பின்னால் எம்எஸ்.தோனி நின்று கொண்டிருந்தார். அது டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி. அவர் சிறப்பான ஒரு ரன் அவுட்டை இப்படி செய்திருந்தார். அந்த ஓவரை வீசிய பல கட்டர் பந்தை வீசி இருந்தார்”

இதையும் படிங்க: அர்ஜுன் டெண்டுல்கர் அப்பா சச்சின் மாதிரியே பெஸ்ட் பேட்ஸ்மேன்.. இது உங்களுக்கு தெரியாதா? – யோக்ராஜ் சிங் பேட்டி

“நான் அந்த கடைசிப் பந்தை ஷார்ட் பந்தாக, லெக் சைடில் ஷாட் அடிக்கும்படி வீச சொன்னேன். அப்படி வீசினால் ஒரு விக்கெட் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் ரன் அவுட் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் விக்கெட் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -