டி20 உ.கோ-ல் ஓபனர்ஸ் யார்?.. சூசகமாக சொன்ன ரோகித்.. வேற லெவல் மாஸ்டர் பிளான்

0
11181
Rohit

நாளை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக யார் இருப்பார்கள்? என்பது பெரிய கேள்வியாக இருந்து. தற்பொழுது இதற்கு சூசகமாக ஒரு பதில் இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்திருக்கிறது.

இன்று இந்திய அணி t20 உலக கோப்பைக்கு தன்னுடைய முதல் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் விளையாடுகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில் ஆடுகளம் எப்படி என்று யாருக்கும் தெரியாது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று தைரியமாக முதலில் பேட்டிங் தேர்வு செய்து கொண்டார். இதில் பேட்டிங் வரிசையில் எடுத்ததும் இரண்டு ஆச்சரியமான முடிவுகள் இந்திய அணி நிர்வாகத்தின் சார்பில் வந்தது. துவக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் வந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது ஆச்சரியமாக மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் வந்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவுகளை பார்க்கும் பொழுது, யார் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதோ அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இதில் விராட் கோலி தாமதமாக அணியில் வந்த இணைந்த காரணத்தினால் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக வரமாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் மற்றும் சிவம் துபே மூவரில் இருவருக்கு விளையாடும் பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று புரிகிறது. எனவே இந்த மூவருக்குமே பயிற்சி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள். இதில் ரிஷப் பண்ட் உறுதியாக விளையாடுவார் என்று தெரிகிறது. சூழ்நிலையை பொறுத்து சிவம் துபே இல்லை சஞ்சு சாம்சங் இருவரில் ஒருவர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : பறந்த ஹாட்ரிக் சிக்சர்.. ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் செய்த முக்கிய மாற்றம்.. டி20 உலககோப்பை

மேலும் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. அதே சமயத்தில் மூன்றாவது இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவரை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இந்த வாய்ப்பை இந்த முறை ரிஷப் பண்ட்டுக்குகொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது மட்டும் தற்போதைக்கு சூழ்நிலையாக இருக்கிறது!