“அடுத்த டெஸ்டுக்கு இன்னும் மோசமான பிட்ச்?.. நான் சொல்றதை இந்திய அணி கேட்கலை” – வாகன் மீண்டும் தாக்கு

0
216
Vaughan

நேற்றைய நாளில் இந்தியா உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்திருக்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் துவங்கும் பொழுது இப்படியான முடிவுகள் வரும் என்று கணித்தவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வெல்லும் என பலரும் நினைத்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த பக்கத்தில் போப் மற்றும் டாம் ஹார்ட்லி இருவரும் இங்கிலாந்து அணியை வெல்ல வைத்தார்கள். அந்தப் பக்கத்தில் ஷாமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

இந்த இரண்டு வெற்றிகளுமே டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பையும் ரசிகர்களுக்கு சுவாரசியத்தையும் கூட்டி இருக்கிறது. இப்படித்தான் முடிவுகள் வரும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில், இரண்டு அணிகளும் விதிவிலக்காக செயல்பட்டு, நல்ல கிரிக்கெட் விளையாடி, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” இந்தியாதான் இப்பொழுதும் இந்த தொடரை வெல்வதற்கான அணி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நிச்சயம் அவர்கள் இந்த தோல்விக்கு எதிர்வினை செய்வார்கள். ஆனால் இந்தியா எப்படியான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என்று தங்களை மீண்டும் ஒரு முறை கேள்வி கேட்டுக் கொள்ளும். இதைவிட திரும்பக் கூடிய ஆடுகளத்தை தயார் செய்தால் அது மோசமானதாக இருக்கும்.

- Advertisement -

இந்த தொடருக்கு முன்பாகவே நான் ஒரு விஷயத்தை சொல்லி இருந்தேன். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை விட, இந்தியா பேட்டிங் செய்ய தட்டையான ஆடுகளத்தை அமைப்பது, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லி இருந்தேன். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்து அவர்களே விழுந்து விட்டார்கள்.

இதையும் படிங்க : “தலையே தொங்கி போயிடுச்சு.. அந்த ரெண்டு பேர் வெளிய போனதும் தோல்வி வந்துடுச்சு” – கும்ப்ளே பரபரப்பு பேச்சு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏழு அறிமுக வீரர்கள் உடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வந்திருந்தது. அதில் நான்கு பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் அனைவருமே வெற்றிக்கு பங்களித்து இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரான ஷாமர் ஜோசப் காயமடைந்த கால் விரலோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடி வெற்றியை தேடி தந்திருக்கிறார்.

ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் எதிர்காலம் கொஞ்சம் சந்தேகத்தில்தான் இருக்கிறது. ஏனென்றால் ஷாமர் ஜோசப் டி20 கிரிக்கெட் பாதையில் செல்வது ஆபத்தாக போய் முடியும்” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.