இந்திய அணி நிர்வாகம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை வித்தியாசமானமுறையில் அணுகி வருகிறது. மேலும் அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மேற்கொண்டு இந்திய அணி நிர்வாகத்தின் திட்டங்கள் எப்படியானதாக இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்திய அணி முதல் சுற்றில் அமெரிக்காவில் விளையாடுகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நியூயார்க் மைதானத்திலும், கடைசி போட்டி டல்லாஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து இந்திய அணி இரண்டாவது சுற்று விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது.
தற்போது முதல் சுற்றில் அமெரிக்க ஆடுகளங்கள் முழுமையாக வேகப் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கின்றன. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் 3 முழுமையான வேகப் பந்துவீச்சாளர்களையும், இரண்டு மிதவேக பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களையும் அணியில் வைத்திருக்கிறது.
மேலும் ஒரே மாதிரியான இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருவரையும் அணியில் வைத்து பேட்டிங் வரிசையை எட்டாவது இடம் வரைக்கும் நீட்டிப்பு செய்திருக்கிறது. மாறிவரும் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை நீளமாக இருப்பது மிகவும் முக்கியமான தேவையாக மாறியிருக்கிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லும் பொழுது அங்கு வேகப்பந்து வீச்சில் வேரியேஷன்கள் மிகவும் முக்கியம். குறிப்பாக மெதுவான பந்துகள், மெதுவான பவுன்சர்கள் மற்றும் கட்டர்கள் வீசுவது முக்கியம். இதே போல அங்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் சரிசமமான சாதக நிலை காணப்படும். எனவே இந்திய அணி மூன்று முழுமையான வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடாது என்று தெரிகிறது
இதையும் படிங்க : இவருக்காக அக்சர் படேல வெளிய வைங்க.. இப்ப ரோகித்துக்கு இக்கட்டான நிலைமை – நவ்ஜோத் சிங் சித்து கருத்து
வெஸ்ட் இண்டீஸில் இரண்டாவது சுற்றில் இந்திய அணியில் முகமது சிராஜ் இல்லை அர்ஸ்தீப் சிங் கழட்டி விடப்படலாம். இந்த இடத்தில் கண்டிப்பாக குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிதவேக பந்து வீச்சு எடுபடும் என்பதால் சிவம் துபே தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் இந்திய பிளேயிங் லெவனில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.