297/6.. டி20 வரலாற்றில் இந்தியா உச்சகட்ட சாதனை.. சாம்சன் சூர்யா மின்னல் வேக ஆட்டம்.. இமாலய ரன் குவிப்பு

0
1269
Sanju

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் இந்திய அணி அதிரடியில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் பெரிய அளவில் ரன்கள் சென்றது. எனவே இந்த போட்டியிலும் 200 ரன்கள் தாண்டி அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதை எல்லாம் தாண்டி பிரமிக்க வைத்து விட்டார்கள்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் – சூரியகுமார் யாதவ் ருத்ர தாண்டவம்

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அபிஷேக் சர்மா நான்கு பந்தில் நான்கு ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூரியகுமார் இருவரும் சேர்ந்து பங்களாதேஷ் பந்துவீச்சை அடித்து நொறுக்கி விட்டார்கள்.

சஞ்சு சாம்சன் 22 பந்தில் அரைசதம் அடிக்க சூரியகுமார் யாதவ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 40 பந்தில் சதம் அடித்தார். இறுதியாக அவர் 47 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 111 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் 35 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி வெறும் 70 பந்தில் 172 ரங்கன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இந்திய அணி இமாலய ரன் குவிப்பு

இதைத்தொடர்ந்து ரியான் பராக் 13 பந்தில் 34 ரன்கள், ஹர்திக்பாண்டியா 18 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள். இந்த ஜோடி வெறும் 26 பந்தில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : 40 பந்தில் சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவ சதம்.. சூரியகுமார் சாதனையை உடைத்தார்.. மேலும் சில ரெக்கார்டுகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆக பதிவானது. முதல் இடத்தில் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் அணி 312 ரன்கள் எடுத்திருந்தது. அதே சமயத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பெரிய நாடுகளில் இந்திய அணி அடித்த இந்த ஸ்கோர்தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முன்பாக அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் உச்சகட்ட சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

- Advertisement -