தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு தென் ஆப்பிரிக்க அணி கடும் போட்டி அளிக்கக் கூடியதாக மாறியிருக்கிறது.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இதற்கு அடுத்த இரண்டு இடங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இருக்கின்றன. நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தில்தான் இருக்கிறது.
தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் கையில் போட்டி முழுமையாக இல்லை.
இதற்கு அடுத்து இந்திய அணி வலிமையான ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு தற்போதைய டெஸ்ட் போட்டியுடன் சேர்த்து 7 போட்டிகளில் மூன்று வெற்றிகள் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு டெஸ்ட் இந்திய மண்ணில் வெல்லும் பொழுதுதான், இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பு 99% உறுதியாகும்!
தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஆறு டெஸ்ட் போட்டியில் 5 டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வாய்ப்பை அதிகரித்து விட்டது.
ஏனென்றால் இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட இரண்டு டெஸ்ட் தொடர்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது. சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்துவது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் பங்களாதேஷ் மண்ணில் வெல்வதற்கு கடினமாக இருக்கும் என்று நினைத்தபொழுது, தென் ஆப்பிரிக்கா முதல் போட்டியை வென்று விட்டது.
இதையும் படிங்க : பந்து தேய்ந்து போச்சு.. அப்ப அஸ்வின் அண்ணா சொன்ன இந்த ஐடியாதான் விக்கெட் அள்ள உதவுச்சி – வாஷிங்டன் சுந்தர் பேச்சு
இதன் காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து இருக்கிறது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்றால், தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!