இந்திய கிரிக்கெட்

திரும்பிய கங்குலி காலம்.. கம்பீருக்கு தானாக அடித்த அதிர்ஷ்டம்.. இனி இந்திய அணியை சாய்ப்பது கடினம்

இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு திருப்புமுனையை உருவாக்கிய கேப்டனாக சவுரவ் கங்குலி இருக்கிறார். அவருடைய கேப்டன்சி காலத்தில் இருந்த ஒரு முக்கியமான விஷயம் மீண்டும் கம்பீர் பயிற்சியின் கீழ் திரும்ப கிடைத்திருக்கிறது. இதை இந்திய அணியின் கேப்டன்கள் சூரியகுமார் மற்றும் ரோஹித் சர்மா மேலும் பயிற்சியாளர் கம்பீர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள்? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -

சவுரவ் கங்குலி தன்னுடைய கேப்டன்சி காலத்தில் நிறைய இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவதற்கு காரணமாக இருந்தார். மேலும் அதைவிட முக்கியமாக அப்படி உள்ளே வந்த வீரர்களுக்கு தேவையான வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் கொடுத்து உருவாக்கினார். இந்திய கிரிக்கெட்டில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்த முதல் தருணம் அதுதான் என்று கூறலாம்.

அப்போதைய சௌரவ் கங்குலியின் அணியில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், மேலும் மிக முக்கியமாக மகேந்திர சிங் தோனி என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளே வந்தார்கள். பிற்காலத்தில் கங்குலியின் அணியையே மகேந்திர சிங் தோனி கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டு இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார்.

இந்த கங்குலியின் அணியில் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், தினேஷ் மோங்கியா என பேட்டிங் வரிசையில் நிறைய வீரர்கள் இருந்தார்கள். இதன் காரணமாக அணியின் பேட்டிங் வரிசையை நீளமாக வைப்பது, போட்டியில் தேவைக்கு தகுந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என கங்குலிக்கு கேப்டனாக நிறைய வசதிகள் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணிக்கு மீண்டும் இப்படியான பகுதி நேர பந்துவீச்சாளர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. சிவம் துபே மற்றும் ரியான் பராக் நம்பிக்கை தரக்கூடியவர்களாக தெரிகிறார்கள். மேலும் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் இருவருமே பந்து வீசினார்கள். இது மட்டுமில்லாமல் டாப் ஆர்டரில் இருக்கும் ஜெய்ஸ்வால் லெக் ஸ்பின் வீசக் கூடியவர். மேலும் காயத்தால் அணிக்கு வெளியில் இருக்கும் திலக் வர்மாவும் பகுதி நேர பந்துவீச்சாளராக உருவாக்கப்பட்டு கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க :கோலி இல்லை.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஹைடனின் ஆல் டைம் ODI உலக கோப்பை லெவன்

தற்போது கங்குலி காலம் போல் மீண்டும் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பெருகி இருக்கிறார்கள். குறிப்பாக பவர் பிளே முடிந்து டி20 கிரிக்கெட்டில் ஐந்து பீல்டர்கள் வெளியில் நிற்கும் நேரத்தில் இப்படியான பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது கேப்டனுக்கு பெரிய அளவில் பலன்களை கொடுக்கும். மேலும் சில நேரங்களில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்களை வைத்து எங்காவது குறைந்தது 4 ஓவர்களை நகர்த்த முடியும். தற்போது இந்திய அணி இருக்கும் சிறப்பான நிலைமைக்கு, பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ஒத்துழைத்தால், இந்திய அணியை வீழ்த்துவது பெரிய கடினமான ஒன்றாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by